எப்படி தோற்கலாம்.. ஏத்துக்க முடியாது.. பிரான்சில் கலவரத்தில் குதித்த ரசிகர்கள்.. பெரும் பதற்றம்!
பாரிஸ்: 2024 ஃபிபா உலகக் கோப்பை தொடரை பிரான்ஸ் இழந்துள்ள நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீசாரை கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது.
2024 ஃபிபா உலகக் கோப்பை தொடர் திருவிழா போல நடந்து முடிந்துள்ளது. நேற்று உலகமே டிவி முன்பும், செல்போன் முன்பும் அமர்ந்து இறுதிப்போட்டியை பார்க்க பிரான்ஸ் அணியை அர்ஜென்டினா வீழ்த்தி வெற்றிபெற்றது.
3-3 என்ற கோல் கணக்கில் ஆட்டம் சமன் அடைய, கடைசியில் சூட் அவுட் ஆட்டத்தில் 4-2 என்ற கணக்கில் அர்ஜென்டினா வென்றது.

வெற்றி
36 வருடங்களுக்கு அர்ஜென்டினா இதன் மூலம் கோப்பையை வென்றுள்ளது. கடந்த முறை கோப்பையை வென்ற பிரான்ஸ் இந்த முறை மீண்டும் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அந்த கனவில் மண்ணை அள்ளி போட்டுள்ளது. நேற்று போட்டியில் ஆட்டம் கடைசி நொடி வரை விறுவிறுப்பாக இருந்தது. கடைசி நிமிடம் இரண்டு அணிகளும் 2 கோல் என்ற நிலையில் சமனில் இருக்க.. 30 நிமிடம் எக்ஸ்டரா டைம் கொடுத்து.. அதில் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் போட ஆட்டம் ஷூட் அவுட் வரை சென்றது.

சூட் அவுட்
பெனால்டியில் அர்ஜென்டினா வரிசையாக 4 கோல்களை போட, பிரான்ஸ் 2 கோல் மட்டுமே போட்டது. இதனால் அர்ஜெடினா அணி வெற்றிபெற்று சாம்பியன் ஆனது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. மெஸ்ஸி 35 ஆண்டுகளுக்கு முன் பிறந்தார். அதாவது மரடோனா தலைமையில் கடைசியில் அர்ஜென்டினா கோப்பையை வென்ற அதே வருடம்தான் மெஸ்ஸி பிறந்தார். இப்போது அவர் தனது கடைசி கால்பந்து தொடரில் தந்து நாட்டிற்கு கோப்பையை பெற்றுக்கொடுத்து உள்ளார்.

கலவரம்
இந்த நிலையில் தற்போது பிரான்சில் கலவரம் ஏற்பட்டுள்ளது. 2024 ஃபிபா உலகக் கோப்பை தொடரை பிரான்ஸ் இழந்துள்ள நிலையில் அந்நாட்டின் மிகப்பெரிய கலவரம் ஏற்பட்டுள்ளது. போலீசாரை கலவரத்தை கட்டுப்படுத்த துப்பாக்கி சூடு நடத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. பிரான்சின் லையான், நைஸ், பாரிஸ் நகரங்களில் மாபெரும் கலவரம் ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் வெற்றிபெறும் என்று சாலையில் நின்று போட்டியை பார்த்துக்கொண்டு இருந்த ரசிகர்கள், பிரான்ஸ் தோல்வி காரணமாக கோபம் அடைந்து கலவரத்தில் குதித்தனர். இது மிகப்பெரிய கலவரத்தை பிரான்சின் பல்வேறு பகுதிகளில் ஏற்படுத்தியது.

போலீஸ்
இதனால் கலவரத்தை தடுக்கும் போலீசார் பிரான்ஸ் முழுக்க குவிக்கப்பட்டு உள்ளனர். கலவரத்தை தடுக்க நேற்று போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். அதேபோல் வானத்தை நோக்கியும் பல முறை சுட்டனர். இதனால் பிரான்சில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. போலீசார் பல இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் பைனல்ஸ் சென்ற போதும் கூட மொரோக்கா ரசிகர்கள் - பிரான்ஸ் ரசிகர்கள் இடையே கடும் மோதல் பாரிசில் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications