"எரியும் பிரான்ஸ்.." துளியும் கவலைப்படாமல் இசை கச்சேரியில் மூழ்கிய அதிபர் மாக்ரோன்! மக்கள் அதிர்ச்சி
பாரீஸ்: பிரான்ஸ் நாடு முழுக்க போராட்டம் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் செய்த காரியம் அந்நாட்டின் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் காரில் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை, போலீசார் தடுத்து மிரட்டியுள்ளனர். அவரின் நெற்றியில் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொல்வதாக மிரட்டியுள்ளனர். இதில் பதறிய அந்த சிறுவன் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப முயன்றுள்ளான்.
As protesters burn French cities, Macron lights up at Elton John concert in Paris
— Spriter Team (@SpriterTeam) June 30, 2023
The President of France in these shots is in a great mood, he enjoys music with his wife and dances a little. pic.twitter.com/v1CSKI7WB8
அப்போது அந்த சிறுவனைப் பாரபட்சமில்லாமல் சுட்டுள்ளனர். இதில் சிறுவன் நஹெல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இந்தச் சம்பவம் நாடு முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டம்: பிரான்ஸ் நாட்டில் எங்குப் பார்த்தாலும் ஒரு விதப் போர் சூழல் நிலவி வருகிறது. போலீசார் குறைந்த வருமானம் கொண்ட பகுதிகளில் அத்துமீறி நடந்து கொள்வதாகவும் இதனால் போலீஸ் சீர்திருத்தம் தேவை என்பதையும் வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் இப்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்த போராட்டத்தால் அங்குப் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டுள்ள நிலையில், சில நாட்களில் மட்டும் பல ஆயிரம் வாகனங்கள் தீ வைக்கப்பட்டுள்ளன.

இந்த போராட்டத்தால் ஒட்டுமொத்த பிரான்ஸும் முடங்கியுள்ளது. எங்குப் பார்த்தாலும் ஒரு வித குழப்பமான சூழலே நிலவி வருகிறது. நாடே இப்படியொரு பதற்றமான சூழலில் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் செய்த காரியம் பெரிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அதாவது மக்கள் வீதியில் இறங்கிய போராட்டம் நடத்தி வரும் நிலையில், இம்மானுவேல் மாக்ரோன் அங்கு நடக்கும் எல்டன் ஜான் இசை நிகழ்ச்சிக்குச் சென்றுள்ளார்.
அதிபர் செய்த செயல்: இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில், அது பிரான்ஸ் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. போராட்டம் சில இடங்களில் வன்முறையாக மாறிய நிலையில், 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மக்கள் ஒரு பக்கம் இப்படிப் போராடிக் கொண்டிருக்க அதே நாளில், அதிபர் மாக்ரோனும் அவரது மனைவி பிரிஜிட்டும், பாரீஸில் நடந்த பிரிட்டிஷ் பாடகர் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோவில், அதிபர் மாக்ரோன் அந்த நிகழ்ச்சியை ரசித்தபடியே நிற்கிறார். இது நெட்டிசன்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்டிசன் ஒருவர், "பிரான்ஸ் நகரங்கள் பற்றி எரிந்து வருகிறது. ஆனால், எல்டன் ஜான் இசை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறார் நமது அதிபர் மக்ரோன். இது அவரது மனநிலையைக் காட்டுவதாக இருக்கிறது. ஒட்டுமொத்த நாடும் பற்றி எரிவதைப் பற்றி அவர் துளியும் கலந்து கொள்ளவில்லை என்றே தெரிகிறது எனப் பதிவிட்டுள்ளார்.
கொந்தளிப்பு: அதேபோல எல்டன் ஜான் தனது கணவருடன் அதிபர் மக்ரோனை சந்தித்த படத்தையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாகப் பரவி வருகிறது. பிரான்ஸ் அதிபர் இவ்வளவு தூரம் பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்வார் என எதிர்பார்க்கவில்லை எனப் பலரும் சாடி வருகின்றனர். அதிபரின் செயலை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் அவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நஹெல் என்ற சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கே போராட்டம் தொடர்ந்து வருகிறது. சில நாட்களில் மட்டும் பல இடங்களுக்கு வன்முறை பரவியுள்ளது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர சுமார் 40 ஆயிரம் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். 3 நாட்களாகத் தொடரும் போராட்டத்தில் இதுவரை 1000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications