இந்தியாவை கலக்கும் "யுபிஐ" பேமெண்ட் முறை இப்போது பிரான்ஸில்..! பிரதமர் மோடி பயணத்தில் ஆரம்பமே அதிரடி
பாரீஸ்: பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யுபிஐ முறை பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இப்போது பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ளார். இந்தப் பயணத்தில் வணிகம், பாதுகாப்பு எனப் பல துறைகளில் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனத் தெரிகிறது.
பிரதமர் மோடி இந்தப் பயணத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்கிடையே அங்கே பாரீஸில் பிரதமர் மோடி இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

பிரதமர் மோடி: இந்தியாவில் மிகவும் வெற்றிகரமானதாக இருக்கும் யுபிஐ தொழில்நுட்பத்தை பிரான்ஸ் நாட்டிலும் அறிமுகப்படுத்த உள்ளதாக அப்போது பிரதமர் மோடி தெரிவித்தார். அங்கே பேசிய பிரதமர் மோடி, "பல மணி நேரம் பயணித்து என்னைக் காண வந்திருக்கும் இந்தியர்களுக்கு நன்றி.. நாம் எங்குச் சென்றாலும் அங்கே மினி இந்தியாவை உருவாக்குவோம். உங்களால் தான் இந்தியா- பிரான்ஸ் கூட்டாண்மை வலுப்பெறுகிறது.
காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவது, சர்வதேச வினியோக சங்கிலி, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவது ஆகியவற்றில் இந்தியாவின் அனுபவம் உலகிற்கு உதவியாக உள்ளது. இந்தியாவும் பிரான்சும் நீண்ட காலமாகத் தொல்பொருள் ஆய்வுகளில் ஈடுபட்டு வருகின்றன. இது உண்மையில் மிகச் சிலருக்கே தெரியும். சண்டிகரில் இருந்து லடாக் வரை பல இடங்களை ஆய்வுகளை நடத்தியுள்ளோம்.
யுபிஐ: இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும் மற்றொரு துறையாக டிஜிட்டல் உள்கட்டமைப்பு இருக்கிறது. இந்தியாவும் பிரான்சும் இணைந்து பிரான்ஸ் நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தைக் கொண்டு வர ஒப்புக்கொண்டுள்ளன. வரும் நாட்களில், இது ஈபிள் கோபுரத்தில் இருந்து தொடங்கும், அதாவது இந்தியச் சுற்றுலாப் பயணிகள் இப்போது ரூபாயில் பணத்தைச் செலுத்த முடியும்" என்று அவர் தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் யுபிஐ தொழில்நுட்பத்தை அனுமதிப்பது என்பது ரொம்பவே முக்கியமானதாக இருக்கும். யுபிஐ வந்துவிட்டால் அங்கே சுற்றுலா செல்லும் இந்தியர்கள் செலவு செய்ய ஒவ்வொரு முறையும் பணத்தை வெளியே எடுக்க வேண்டிய கட்டாயம் இல்லாமல் போகும்.
யுபிஐ முறை: யுபிஐ சேவை என்பது இந்தியாவில் ரொம்பவே பிரபலமானதாகும். இதன் மூலம் பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் செயலியில் இருந்து அணுக முடியும். நீங்கள் வேறு வேறு வங்கியில் வங்கிக் கணக்கை வைத்திருந்தாலும் ஒரே ஒரு செயலி இருந்தால் போதும். மிக எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பணம் அனுப்ப முடியும் என்பதால் பலரும் இதைத்தான் ஆர்வமாகப் பயன்படுத்துகின்றனர்.
இதைப் பயன்படுத்தக் கூடுதலாக எந்தவொரு கட்டணமும் இல்லை என்பதால் பலரும் யுபிஐ முறையை ஆர்வமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.
என்சிபிஐ எனப்படும் நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, கடந்த 2016 ஏப்ரல் 21ஆம் தேதி சோதனை முறையில் இந்த யுபிஐ முறையை அறிமுகப்படுத்தியது. அதன் பின்னர், யுபிஐ பயன்பாடு மின்ல் வேகத்தில் வளர்ந்துவிட்டது. ரூ. 5, 10 ரூபாய்க்குக் கூட இப்போது வியாபாரிகள் யுபிஐ மூலம் பணத்தைப் பெற்றுக் கொள்ளச் சம்மதித்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் யுபிஐ மூலம் பரிவர்த்தனை செய்யப்படும் தொகை உச்சத்தைத் தொட்டு வருகிறது.
உலக நாடுகள்: கடந்த 2022இல், இந்தியாவில் யுபிஐ முறையை அறிமுகப்படுத்திய என்சிபிஐ பிரான்ஸ் நாட்டின் வேகமான மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் பேமென்ட் முறையான Lyra உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதேபோல இந்த ஆண்டு, யுபிஐ மற்றும் சிங்கப்பூரின் பேநவ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் இரு நாட்டு மக்களும் பணத்தை எளிதாக அனுப்பிக் கொள்ளலாம்.
அதேபோல ஐக்கிய அமீரகம், பூடான், நேபாளம் நாடுகளும் யுபிஐ முறையை ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது. இது மட்டுமின்றி யுபிஐ அமெரிக்காவில் அறிமுகப்படுத்துவது குறித்தும் இப்போது பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications