Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வினேஷ் போகத் மேல்முறையீட்டை ஏற்றது நடுவர் நீதிமன்றம்! "வெள்ளி" கிடைக்குமா? இன்று தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

பாரீஸ்: பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் மகளிர் 50 கிலோ பிரிவில் 100 கிராம் எடை அதிகரிப்பால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில்‌ இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்த விவகாரம்‌ குறித்த இறுதி தீர்ப்பை நடுவர் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை வழங்க உள்ளது.

பாரீஸ் ஒலிம்பிக் தொடரின் மல்யுத்த போட்டியில் செவ்வாய்கிழமை நடைபெற்ற பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுவை அபாரமாக வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத்.

Vinesh Phogat appeals against paris Olympic disqualification CAS gives verdict today

வினேஷ் போகத்: மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ பிரிவில் 16ஆவது சுற்று போட்டியில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுய் சுசாகியை 3-2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார் வினேஷ் போகத். காலிறுதிப் போட்டியில் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த ஒக்சானா விஸ்லிவ்னா லிவாக்கை 7-5 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

செவ்வாய்க்கிழமை இரவு 10.25 மணிக்கு நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் கியூபா நாட்டைச் சேர்ந்த யூஸ்னிலிஸ் குஸ்மான் லோப்ஸை எதிர்கொண்டு 5 - 0 என வென்றார். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

நாடே எதிர்பார்த்த பதக்கக் கனவு: ஒட்டுமொத்த நாடும், தங்கம் நிச்சயம் என்ற நினைப்போடு தூங்கச் சென்ற நிலையில் காலையில் கனவு தகர்ந்தது. இந்திய நேரப்படி நேற்று காலை 9 மணியளவில் நடந்த உடல் எடை தகுதி பரிசோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 50 கிலோவை தாண்டி 100 கிராம் அதிகமாக இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த தகுதி நீக்கத்தால் வினேஷ் போகத்துக்கு பதக்கமும் கிடையாது, தரவரிசைப் பட்டியலில் கடைசி இடத்திற்கும் தள்ளப்படுவார் என்ற செய்தி இந்திய ரசிகர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியது. வினேஷ் போகத், தனது உடல் எடையைக் குறைக்க கடுமையான உடற்பயிற்சி. தலைமுடியை வெட்டி என பல முயற்சிகளை எடுத்தும் 100 கிராம் எடையால் அவரது பதக்க கனவு தகர்ந்தது ஒட்டுமொத்த நாட்டையும் கலங்கச் செய்தது.

வினேஷ் போகத் மேல்முறையீடு: இந்நிலையில், பாரீஸ் ஒலிம்பிக்ஸ் - விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில்‌ (CAS) இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்துள்ளார். தகுதி நீக்கத்தை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகத், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இந்த விவகாரம்‌ குறித்த இறுதி தீர்ப்பை நடுவர் நீதிமன்றம் இன்று வழங்க உள்ளது.

விசாரணை: முன்னதாக நேற்றைய தினம் வினேஷ் போகத்தின் மேல்முறையீட்டை விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இரவு 9.30 மணியளவில் இந்த மனு மீதான விசாரணை தொடங்கும் என கூறப்பட்டது.

இருப்பினும், இந்தியா சார்பில் வழக்கறிஞரை நியமிக்கக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த விகாரம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் விசாரணைக்கு வர உள்ளது. மாலைக்குள் நடுவர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை அளிக்கும் எனத் தெரிகிறது.

என்ன நடக்கும்?: தங்கப் பதக்கத்திற்காக போட்டியிட அனுமதி கோரி, விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் (CAS) போகத் முறையிட்டுள்ளார். அவ்வாறு வழங்கப்படாவிட்டால், கூட்டு வெள்ளிப் பதக்கத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

ஒலிம்பிக் கமிட்டியின் கடுமையான ரூல்ஸ் காரணமாக தங்கப் பதக்கத்திற்காக போட்டியிடுவதற்கான வினேஷ் போகத்தின் வேண்டுகோள் அங்கீகரிக்கப்படுவது சாத்தியமற்றது எனக் கூறப்படுகிறது. ஏனெனில் இறுதிப் போட்டியாளர்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டதால், தங்கப் பதக்கத்திற்கான போட்டியை மீண்டும் திட்டமிடுவது சவாலானதாக இருக்கும். எனினும், அதிகபட்சமாக வெள்ளிப் பதக்கம் அவருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதற்கு வாய்ப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

நடுவர் நீதிமன்றம் என்பது என்ன?: விளையாட்டிற்கான நடுவர் மன்றம் (CAS) என்பது 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஒரு சுயாதீன நிறுவனம். இது விளையாட்டு தொடர்பான சர்ச்சைகளை நடுவர் மூலம் தீர்க்க உதவுகிறது. இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்தில் உள்ள லொசேனில் உள்ளது. நியூயார்க் நகரம் மற்றும் சிட்னியில் நீதிமன்றங்களைக் கொண்டுள்ளது. ஒலிம்பிக் போட்டி நடைபெறும் நகரங்களில், நடுவர் மன்றத்திற்கான தற்காலிக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சாதாரண நீதிமன்றங்களின் தீர்ப்புகளைப் போலவே நடுவர் மன்றத் தீர்ப்புகள் விளையாட்டுத் துறையில் உள்ள சட்ட மோதல்களைத் தீர்க்கிறது.

கென்யா வீராங்கனைக்கு நடந்தது என்ன?: வினேஷ் போகத்தை போலவே ஒலிம்பிக் கமிட்டியால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட கென்யா வீராங்கனை ஒருவர் மேல்முறையீடு செய்து இழந்த பதக்கத்தை வென்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 5000மீட்டர் ஓட்டப்பந்தயம் நேற்று முன்தினம் நடைபெற்றது. பரபரப்பான இந்தப் போட்டியில் கென்யாவின் பீட்ரைஸ் செபெட் முதல் இடமும், மற்றொரு கென்ய வீராங்கனையான ஃபெய்த் கிபிகோன் இரண்டாவது இடமும், நெதர்லாந்தின் சிஃபன் ஹாசன் மூன்றாவது இடமும் பிடித்தனர்.

வெள்ளிப் பதக்கம் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த கென்ய வீராங்கனை ஃபெய்த் கிபிகோன் தகுதிநீக்கம் செய்யப்பட்டார். கென்யாவின் ஃபெய்த் கிபிகோன் ஓட்டப்பந்தயத்தின் போது வெண்கல பதக்கம் வென்ற நெதர்லாந்து வீராங்கனை சிஃபன் ஹாசன் முன்னேறி செல்வதற்கு இடையூறு செய்ததாகவும், அவரை 2ஆம் இடம் பிடிக்கவிடாமல் களத்தில் தடங்கல் ஏற்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டதால் கிபிகோனின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டு அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

கென்யாவின் கிபிகோன் சார்பில் அவர்களின் பயிற்சியாளர் குழு ஒலிம்பிக் கமிட்டியிடம் மேல்முறையீடு செய்தது, அதில் கிபிகோனின் தகுதிநீக்கம் ரத்துச்செய்யப்பட்டு அவருக்கான வெள்ளிப்பதக்கமும் உறுதிசெய்யப்பட்டது. கென்யாவின் கிபிகோன் மேல்முறையீடு காரணமாக அவரது வெள்ளிப்பதக்கமும் உறுதிசெய்யப்பட்டது போல வினேஷுக்கும் பதக்கம் உறுதி செய்யப்பட வேண்டும் என இந்திய விளையாட்டு ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

முன்னதாக, இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் பி.டி. உஷா, இந்திய மல்யுத்த சம்மேளனம் (WFI) யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்தத்துடன் (UWW) வினேஷ் போகத்தை தகுதி நீக்கம் செய்த முடிவை மேல்முறையீடு செய்ததை உறுதிப்படுத்தினார். எனினும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அவரது தகுதி நீக்கத்தை உறுதி செய்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+