கணவனின் பயங்கரம்.. மனைவியை 90 முறை பலாத்காரம்.. நினைவு இழந்த பாட்டி.. ஆன்லைனில் ஆள் எடுக்கும் தாத்தா
பாரிஸ்: 71 வயது தாத்தாவுக்கு விரைவில் தண்டனை தரப்போகிறார்கள்.. இந்த தாத்தா செய்த காரியத்தை நினைத்து ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.. இதுகுறித்து நீதிமன்றமும், காவல்துறையும் என்ன சொல்கின்றன??
பிரான்சில் 71 வயதான நபர் ஒருவர், தன் மனைவிக்கு போதை மருந்து கொடுத்து மயக்கநிலை அடைய செய்ததுடன், அவரை கற்பழிக்க ஆன்லைனில் ஆள் எடுத்து பலாத்காரமும் செய்ய வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 26 முதல் 74 வயதுள்ள சுமார் 72 பேர் அவரை கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பலாத்காரம்: பெண்கள் மீதான பலாத்காரம் என்பது உலக அளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.. பெண்களுக்கான பாதுகாப்பு என்பதும் கேள்விக்குறியாகிவிட்டது.. பாலியல் புகார்களின் எண்ணிக்கைகளும் நாளுக்குநாள் பெருகி கொண்டேவருகிறது.
பெண்களுக்கு குடும்ப உறுப்பினர்களாலேயே பாலியல் தொந்தரவு என்பது கொடுமையானது.. அதுவும் கட்டிய கணவனாலேயே பாலியல் தொல்லை என்பதை அதைவிட கொடுமையானது. இதற்கு வயதெல்லாம் ஒரு தடையேயில்லை. இதோ 71 வயது தாத்தா இந்த வயதில் போலீசில் சிக்கி அசிங்கப்பட்டுள்ளார்.
தூக்க மாத்திரை: பிரான்சை சேர்ந்த அந்த தாத்தாவின் பெயர் டொமினிகியூ.. இவரது மனைவி பெயர் கிசெல்.. 72 வயதாகிறது.. இவர் தன்னுடைய மனைவிக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து தந்து குடிக்க வைப்பாராம். அந்த பாட்டியும் தூக்க மாத்திரை என்பது தெரியாமல், அதை குடித்துவிடுவாராம். அதற்கு பிறகு போதை மாத்திரைகளையும் பாட்டிக்கு தருவாராம் தாத்தா.
இறுதியில் பாட்டி மயக்கமாகி விழுந்ததும், அவரை பலாத்காரம் செய்வதற்கு ஆட்களை ரூமுக்குள் அறைக்குள் அனுப்பி வைப்பாராம். இந்த ஆட்களை ஆன்லைனிலேயே தேர்ந்தெடுத்து, மனைவியை கற்பழிக்க வழிவகை செய்துள்ளார் தாத்தா. இப்படியே 10 வருட காலமாகவே அவர் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சந்தேகம் வரவில்லை: வயதானவர் என்பதாலும், பாட்டியுடன் ஒன்றாக வாழ்ந்து வந்தாலும் இந்த தாத்தா மீது யாருக்குமே சந்தேகம் வரவில்லை.. ஆனால், ஒருநாள் இந்த தாத்தா ஷாப்பிங் சென்டர் போனாராம்.. அப்போது குட்டை பாவாடை அணிந்துகொண்டு, பெண் ஒருவர் அங்கு வந்துள்ளார்.. அந்த பெண்ணுக்கு தெரியாமல், அவரை கேமராவில் வீடியோ எடுத்திருக்கிறார் தாத்தா.
அப்போதுதான் தாத்தா வசமாக சிக்கிவிட்டார்.. போலீசாரும் இவரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது அவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டர்களை ஆய்வு செய்தபோதுதான், போலீசாருக்கு தூக்கி வாரிப்போட்டது. தன்னுடைய மனைவியை பலபேர் பலாத்காரம் செய்யும் வீடியோ, போட்டோக்களை, லேப்டாப்பில் தாத்தா சேமித்து வைத்திருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பலாத்காரம்: இது பற்றி போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "டொமினிகியூ - கிசெல் தம்பதிக்கு ஒரு மகள், 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 10 ஆண்டுகளாகவே மனைவியை பலாத்காரம் செய்ய ஆன்லைன் மூலமாக ஆள் எடுத்துள்ளார். இதற்காக கிசெலின் சாப்பாடு அல்லது மதுவில் தூக்க மாத்திரை மற்றும் போதை பொருளை தந்துள்ளார்.. 26 வயது முதல் 74 வயதுள்ளவர்களை முன்கூட்டியே தேர்ந்தெடுத்து வைத்து கொள்கிறார்..
தன்னுடைய மனைவி ஆழ்ந்த மயக்க நிலையில் இருக்கும்போது பலாத்காரம் செய்வதற்காக ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட நபருக்கு போன் செய்து வரவழைக்கிறார்.. அந்த நபரும், வீட்டிற்குள் நுழைந்த கிசெல்லை பலாத்காரம் செய்கிறார்.. இதுபோல, கிசெல்லை இதுவரை 72 பேர் 92 முறை பலாத்காரம் செய்திருக்கிறார்கள்.. அவர்கள் அனைவரும் 26 முதல் 74 வயதுடையவர்கள். பலாத்காரம் செய்தவர்களில் 50 பேரின் அடையாளம் மட்டுமே காணப்பட்டுள்ளது. இந்த வழக்கு இப்போது நீதிமன்றம் வரை வந்துள்ளது" என்றனர்..
விசாரணை: இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.. அப்போது சம்பந்தப்பட்ட தாத்தா கோர்ட்டுக்கு வந்திருந்தார்.. தாத்தாவுடன் அவரது 2 மகள்களும் கோர்ட்டுக்கு வந்திருந்தார்கள்..
இதுகுறித்து வழக்காடிய வக்கீல்,"கிசெல்லுக்கு உடம்பு சரியில்லை.. பலாத்காரம் செய்யும்போது தான் போதையில் இருப்பதை கூட அவர் உணரவில்லை... அந்தளவிற்கு அதிகமான போதை மருந்து கலக்கப்பட்ட உணவு தந்திருக்கிறார்கள்.. அதீத போதையால் என்ன நடந்தது என்றே கடந்த 10 வருடங்களாக அவரால் உணர முடியவில்லை. அளவுக்கு அதிகமான போதை மருந்துகளால் உடல்நிலையும் மோசமாகிவிட்டது.. ஞாபக மறதியும் வந்துவிட்டது.. எவ்வளவோ சிகிச்சை அளித்தும் பயனில்லை" என்றார்.
பரபரப்பு: இதையடுத்து, இந்த வழக்கில் டிசம்பர் 20ம் தேதி தீர்ப்பளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 71 வயசு தாத்தாவுக்கு இதெல்லாம் தேவையா? டிசம்பர் மாதம் என்ன தீர்ப்பு வரப்போகுதோ தெரியவில்லை..!!












Click it and Unblock the Notifications