ரயில் தண்டவாளத்தில் கிடந்த மர்ம பொருள்.. கிட்ட போய் பார்த்தவர்களுக்கு ஷாக்! பிரான்ஸில் சலசலப்பு
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் முக்கிய வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டு இரண்டாம் உலகப் போர் காலத்தை சேர்ந்தது என்றும் சொல்லப்படுகிறது. இதன் காரணமாக பாரிஸ் கார் து நோர்ட் (Gare du Nord) ரயில் நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது.
இதுபோன்று வெடிகுண்டுகள் பிரான்ஸில் கண்டுபிடிக்கப்படுவது இது முதல்முறை கிடையாது. இருப்பினும், இந்த குண்டு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பல இன்னமும் வெடிக்காமல் பல இடங்களில் அப்படியே புதைந்து இருக்கிறது. பிரான்ஸ் நாட்டிலும் இப்படி சில இடங்கள் இருக்கின்றன. வெடிக்காத குண்டுகளை தேடி, அதை செயலிழக்க செய்ய தனி குழுவே செயல்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில், நேற்று பாரிஸ் கார் து நோர்ட் (Gare du Nord) ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள தண்டவாளத்தில் ரயில்வே ஊழியர்கள் வேலை செய்து வந்திருக்கிறார்கள்.
அப்போது வழக்கத்திற்கு மாறான, வித்தியாசமான பொருளை பார்த்திருக்கிறார்கள். தண்டவாளத்தில் இரும்பு கிளிப்புகள்தான் அதிகம் இருக்கும். ஆனால் இந்த பொருள் இரும்பு கிளிப்பை போன்று கிடையாது. அப்படி இருக்கையில் என்னதான் அது? என்று தோண்டி பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான் அது ஒரு வெடி குண்டு என்பது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ், அது இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட குண்டு என்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
இந்த குண்டு வெடித்திருந்தால் 100-200 மீ சுற்றளவில் வெறும் சாம்பல்தான் மிஞ்சி இருந்திருக்கும். யோசித்து பாருங்கள் மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சென்றுக்கொண்டிருக்கும் ரயில் மீது இந்த குண்டு வெடித்தால் என்ன ஆகும்? நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் காயமடைவார்கள். கடுமையான பொருளாதார பாதிப்புகளும் ஏற்படும். இந்த சேதாரங்களை அதிகாரிகளும் உறுதி செய்திருக்கிறார்கள்.
இப்படி இருக்கையில், குண்டை பத்திரமாக அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "குண்டு கண்டுபிடிக்கப்பட்ட ரயில் நிலையத்தில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. பயணிகள் மாற்று போக்குவரத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். பிரான்ஸில் ஒரு நாளைக்கு சுமார் 7 லட்சம் பேர் ரயில்களை பயன்படுத்துகிறார்கள். குண்டு வெடித்திருந்தால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக முன்னரே கண்டுபிடிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது" என்று கூறியுள்ளார்.
கடந்த 2019ம் ஆண்டு இதேபோல செயிண்ட்-லாசரே (Saint-Lazare) ரயில் நிலையத்திலும் ஒரு வெடி குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதுவும் இரண்டாம் உலகப்போர் காலத்தை சேர்ந்தது என்பது கவனிக்கத்தக்கது. போர்கள் எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என்பதற்கு இப்படியான சம்பவங்களே சாட்சி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications