வயிற்றில் இருந்து வெளியே வந்த குடல்.. ரயில்வே போலீஸ் தடியடியால் துடிதுடித்த வாலிபர்! நெஞ்சே பதறுதே
பாட்னா: பீகார் ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசலால் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறின்போது ரயில்வே போலீஸ் தாக்கியதில் பயணி ஒருவரின் குடல் வெளியே வரும்வரை தாக்கிய அதிர்ச்சி சம்பவம் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது.
பீகார் மாநிலம் சித்மாரி மாவட்டம் ஜனக்பூர் ரயில்வே ஸ்டேஷன் வழியாக நேற்று முன்தினம் இரவு மும்பை நோக்கி கர்மபூமி எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

இதனால் ரயிலில் இடம் பிடிப்பது தொடர்பாக ஜனக்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. ரயிலின் ஜன்னல் வழியாக பலரும் இருக்கை பிடித்தனர். இன்னும் சிலர் ஜன்னல் போல் இருக்கும் எமர்ஜென்சி எக்ஸிட் வழியாக ரயிலுக்குள் ஏறினர்.
இதனால் பயணிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே போலீசார் அங்கு வந்து நிலைமையை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் சீட் பிடிப்பதில் மும்முரமாக இருந்தனர். இதனால் ரயில்வே போலீசார் மற்றும் பயணிகள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தினர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
அப்போது முகமது ஃபுக்ரான் என்பவரை பிடித்து ரயில்வே போலீசார் தாக்கினர். போலீசார் விடாமல் கொடூரமாக தாக்கியதில் அவரது வயிற்றில் இருந்து குடல் வெளியே வந்தது. சில நாட்களுக்கு முன்பு தான் அவர் வயிற்றில் அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையில் போலீசாரின் தாக்குதலின்போது குடல் வெளியே வந்தது. இதனால் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து உடனடியாக முகமது ஃபுக்ரான் மீட்கப்பட்டு அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக முசாபர்பூரின் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கிடையே தான் முகமது ஃபுக்ரானின் வயிற்றில் இருந்து குடல் வெளியே வரும்வரை தாக்கிய ரயில்வே போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய ரயில்வே போலீஸ் பிரிவின் உயரதிகாரிகள் ரயில்வே போலீஸ்காரர்கள் ப்ராணி தயானந்த் பாஸ்வான் மற்றும் கோரேலால் சவுகி ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications