பீகாரில் 30 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. முக்கிய துறைகளை அள்ளிய தேஜஸ்வியின் ஆர்ஜேடி!
பாட்னா: பீகாரில் அமைச்சரவை விரிவாக்கம் இறுதி செய்யப்பட்டு 30 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் தேஜஸ்வி யாதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
பீகாரில் பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டு தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதிஷ் குமார், லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பிகார் முதல்வராக பதவியேற்றார். துணை முதல்வராக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுள்ளார்.

இந்நிலையில், பீகாரில் அமைந்துள்ள மகா கூட்டணி அரசின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றது. அமைச்சரவையில் தேஜஸ்வி யாதவ் உட்பட 30 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கூட்டணியிலேயே அதிக தொகுதிகளை பெற்றிருக்கும் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு 16 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தேஜஸ்வி யாதவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சுகாதாரத் துறை வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, நிதித்துறை, வணிகவரி, சாலைக் கட்டுமானம், பேரிடர் மேலாண்மை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கு ஒதுக்கப்பட உள்ளன. அக்கட்சியில் எதிர்பார்த்தது போலவே யாதவ் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிகப்படியாக 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய ஜனதா தளத்துக்கு 11 அமைச்சர்கள் கிடைத்துள்ளனர். காங்கிரஸுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ஜிதன்ராம் மாஞ்சியின் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு ஒரு அமைச்சர் பதவியும், சுயேச்சை எம்எல்ஏ ஒருவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளன.
முதல்வர் நிதிஷ் குமார் ஏற்கனவே தன் வசம் இருந்த உள்துறையை தக்க வைத்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, கல்வி, கட்டட கட்டுமானம், சிறுபான்மை நலன், சமூக நலத்துறை, நீர்வளங்கள் உள்ளிட்ட துறைகள் ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
-
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
சென்னை திரும்பிய அண்ணாமலை.. விமான நிலையத்தில் திரண்டு வந்து ஆதரவாளர்கள் கொடுத்த ‘மாஸ்’ வரவேற்பு! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications