34% மக்களின் வருமானம் 6 ஆயிரத்திற்கும் குறைவு.. பீகாரில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வெளியான தகவல்
பாட்னா: பீகாரில் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான மக்கள் வறுமையில் வாழ்வதும் அவர்களின் மாதச் சம்பளம் வெறும் ரூ.6,000 மட்டுமே என்பதும் அம்மாநிலத்தில் நடத்தி முடிக்கப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மூலம் தெரியவந்துள்ளது.
சாதி வாரியான பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த தகவல்களை இன்று பீகார் அரசு வெளியிட்டது. பீகார் மாநில சட்டப்பேரவையில் இந்த கணக்கெடுப்பு விவரங்களை பீகார் சட்டப்பேரவையில் இன்று வெளியிடப்பட்டது. இதன்படி, பட்டியலின, பழங்குடியினர் குடும்பங்களில் 42 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஏழைகளாக உள்ளனர் என்ற விவரம் தெரியவந்துள்ளது. அதேபோல், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களில் 33 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் ஏழைகள் என்ற விவரமும் வெளியிடப்பட்டுள்ளது.

பட்டியல் சாதியினரில் வெறும் 6 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பள்ளிப்படிப்பை முடித்திருக்கின்றனர். மொத்தமாக, மாநிலத்தில் உள்ள 34.13 சதவீத குடும்பங்களின் மாத வருமானம், 6,000 ரூபாய் என்ற விவரமும் வெளியாகியிருக்கிறது. எஸ்.சி வகுப்பினரில் வெறும் 5.76 சதவீதம் பேர் மட்டுமே 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து இருக்கிறார்கள்.
பீகார் மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில், 42.93 % பட்டியல் சாதி மக்கள், 42.70 % பழங்குடியின மக்கள் வறுமையில் இருக்கின்றனர். அதேபோல, 33.16 % பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் 33.58 சதவிகித மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் வறுமையில் வாடுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிற சாதிகளில், 23.72 %மக்கள் வறுமையில் வாடுகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications