பீகாரில் இறங்கும் அதானி.. ரூ.8,700 கோடி முதலீடு! மெகா பிளான்.. மொத்தமா மாறப்போகுது! என்னனு பாருங்க!
பாட்னா: பீகார் மாநிலத்தில் சுமார் ரூ.8,000 கோடிக்கு முதலீடு செய்ய உள்ளதாக அதானி குழுமம் அறிவித்துள்ளது.
அதானி குழுமம் பீகார் மாநிலத்தில் பல்வேறு துறைகளில் ரூ. 8,700 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் கிட்டத்தட்ட 10,000 பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநர் பிரணவ் அதானி இன்று தெரிவித்தார்.

பீகார் பிசினஸ் கனெக்ட் 2023-ன் முழுமையான அமர்வில் அதானி எண்டர்பிரைசஸ் இயக்குநர் பிரணவ் அதானி இன்று உரையாற்றினார். அப்போது, நிதிஷ் குமார் அரசு, வணிக நிறுவனங்களை பீகார் மாநிலத்திற்குள் முதலீடு செய்யவும், பின்தங்கிய மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் செயல்படுவதாக பாராட்டினார் பிரணவ் அதானி.
மேலும் இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரணவ் அதானி, பீகார் இப்போது கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமூக சீர்திருத்தங்கள், சட்டம் ஒழுங்கு நிலைமை, எழுத்தறிவு மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றில் மாற்றம் தெரிகிறது என்று கூறினார்.
அதானி குழுமம் பீகாரில் வளர்ச்சிக்கான தொலைநோக்கு பார்வையுடன் உள்ளது என்றும், அதானி குழுமம் ஏற்கனவே பீகாரில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் எரிவாயு விநியோகத் துறைகளில் ரூ.850 கோடி முதலீடு செய்துள்ளது என்றும் சுமார் 3,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், "அதானி குழுமம் ஏற்கனவே பீகாரில் ரூ.850 கோடி முதலீடு செய்துள்ளது. நாங்கள் இப்போது எங்கள் முதலீட்டை பத்து மடங்கு அதிகமாகச் செய்ய விரும்புகிறோம். இந்த ரூ. 8,700 கோடி முதலீட்டுத் திட்டம் மாநிலத்தில் புதிய துறைகளில் பணியாற்றும்." எனத் தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம் உணவு மற்றும் பானங்கள் துறையில் செயல்படும் கூட்டு நிறுவனமான அதானி வில்மர் குழுமத்தை பீகாருக்கு கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகிறது. மேலும், பீகாரில் சிமென்ட் உற்பத்தியைத் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. சிமென்ட் உற்பத்தித் திட்டங்கள் 10 மில்லியன் மெட்ரிக் டன் இலக்கை இலக்காகக் கொண்டுள்ளன மற்றும் சுமார் 3,000 வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் அதானி தலைமையிலான அதானி குழுமம் பல்வேறு மாநிலங்களில் முதலீடு செய்வதற்கான அறிவிப்புகளைக் கொடுத்து வருகிறது. குறிப்பாக, கிரீன் எனர்ஜியை மேம்படுத்தும் விதமாக அடுத்த 10 ஆண்டுகளில் 10,000 கோடி டாலர்கள் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இந்த நிறுவனம் தனது பார்வையை பீகார் பக்கம் திருப்பி இருப்பது கவனம் பெற்றுள்ளது.
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு












Click it and Unblock the Notifications