தேர்தல் பிரசாரத்துக்கு இன்று குட்பை! பீகாரில் அமித்ஷா - ராகுல் கடைசி நாள் வியூகம்.. களமிறங்கிய யோகி
பாட்னா: பீகாரில் முதற்கட்ட தேர்தல் கடந்த 6ம் தேதி நடந்து முடிந்தது. இதையடுத்து 2வது மற்றும் கடைசி கட்ட தேர்தல் நாளை மறுநாள் (நவம்பர் 11)ம் தேதி 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வர உள்ளது. கடைசி நாளான இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, பாஜகவின் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டவர்கள் பொதுக்கூட்டங்களில் பேச உள்ளனர்.
பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பீகாரில் முதற்கட்ட தேர்தல் நவம்பர் 6ம் தேதி 121 சட்டசபை தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது. மொத்தம் 65.08 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளது.

2வது கட்டமாக நவம்பர் 11ம் தேதி (நாளை மறுநாள்) 20 மாவட்டங்களில் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. அதன்பிறகு, நவம்பர் 14ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பொதுவாக தேர்தலுக்கு ஒருநாள் இருக்கும்போது பிரசாரம் நிறைவு பெறும். அந்த வகையில் பீகாரில் இன்றுடன் பகிரங்க தேர்தல் பிரசாரம் நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று பாஜக அதன் கூட்டணி கட்சி தலைவர்கள், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர். அதன்படி பாஜக சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஜா பஜல்கஞ்ச் மைதானம் மற்றும் மதுர்மா மேலோ மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேச உள்ளார்.
அதேபோல் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் 4 பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கிசான்கஞ்ச் மற்றும் அமோர் ஆகிய இடங்களில் நடக்கும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேச உள்ளார். அதேபோல் பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதல்வர் நிதிஷ் குமார், காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஆர்ஜேடி கட்சியின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டவர்களும் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளனர்.
இன்று பிரதமர் மோடி பிரசாரம் செய்யவில்லை. பீகார் தேர்தல் பிரசாரத்தை பிரதமர் மோடி நேற்றுடன் முடித்து கொண்டார். நேற்றைய தினம் மோடி சன்படியா மற்றும் மற்றும் சிதாமார்ஹி ஆகிய இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது அவர், ‛‛நான் இன்றுடன் பீகாரில் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொள்கிறேன். நவம்பர் 14ம் தேதி பாஜக கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பதவியேற்பு விழாவுக்கு மீண்டும் வருகிறேன்'' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
தற்போது பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் செயல்பட்டு வருகிறார். மீண்டும் தேர்தலில் வெற்றி கிடைக்கும் என்று பாஜக கூட்டணி கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அதேபோல், இந்த முறை நிச்சயம் பீகாரில் ஆட்சி மாற்றம் நடக்கும். மக்கள் ‛மகாகத் பந்தன்' கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைப்பார்கள் என்று காங்கிரஸ் - ஆர்ஜேடி கட்சி தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பீகாரை எடுத்து கொண்டால் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 122 சட்டசபை தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். பீகாரில் பாஜக கூட்டணி மற்றும் ‛இந்தியா' கூட்டணி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போதைய முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம், முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக்ஜன சக்தி (ராம்விலாஸ்), முன்னாள் முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான ஜிதன் ராம் மஞ்சியின் எச்ஏஎம் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சிகள் உள்ளன.
மறுபுறம் எதிர்க்கட்சிகள் ‛மகாகத்பந்தன்' என்ற பெயரில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இதில் லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடிஎனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் லிபரேஷன் - சிபிஐஎம்எல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள், ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியின் வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்











Click it and Unblock the Notifications