பீகாரில் பரபரப்பு- பாஜகவில் ஜாதிய ஒடுக்குமுறை- கட்சியே வேண்டாம்: தூக்கி எறிந்த மாநில துணைத் தலைவர்!
பாட்னா: பீகார் பாஜகவில் ஜாதிய ஒடுக்குமுறை இருப்பதாக கூறி அக்கட்சியில் இருந்து மாநில துணைத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் விலகி உள்ளார். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அண்மையில் சந்தித்த ராஜீவ் ரஞ்சன் விரைவில் ஐக்கிய ஜனதா தளம்- ஜேடியூ கட்சியில் இணையக் கூடும் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.
பீகாரில் பாஜக- ஜேடியூ கூட்டணி முறிந்ததை தொடர்ந்து ஜேடியூ- காங்கிரஸ்- ஆர்ஜேடி- இடதுசாரிகள் இணைந்து புதிய ஆட்சியை முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அமைத்தன. இப்புதிய மெகா கூட்டணியானது 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது.

பீகாரில் அண்மையில் கள்ளச்சாராய மரணங்கள் பெரும் பரபரப்பை கிளப்பின. கள்ளச்சாராயம் குடித்து மரணம் அடைந்தால் நிதி உதவி வழங்க முடியாது என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்தார். ஆனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு நிதி உதவி தர வேண்டும் என்கிறது பாஜக. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரிலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. பீகார் பாஜக எம்பிக்கள், இந்த பிரச்சனையை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர். அத்துடன் நாடாளுமன்ற வளாகத்திலும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் பீகார் பாஜக மாநில துணைத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் திடீரென முதல்வர் நிதிஷ்குமாரை சந்தித்து பேசி இருந்தார். அப்போது, கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டியது இல்லை என கூறியிருந்தார். இதனால் பீகார் பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டது. தற்போது பாஜகவில் இருந்து விலகுவதாக மாநில துணைத் தலைவர் ராஜீவ் ரஞ்சன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராஜீவ் ரஞ்சன் கூறுகையில், பாஜகவில் தலித்துகள், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிரானவர்கள் ஆதிக்கம்தான் அதிகமாக இருக்கிறது. அவர்கள்தான் அதிகாரத்தை பல ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். ஒருசில தலைவர்கள் தவிர தலித்துகள், பிற்படுத்தப்பட்ட பாஜக நிர்வாகிகள் வெறும் கட்சி கொடிகளைத் தூக்கத்தான் பயன்படுத்தப்படுகின்றனர். பிரதமர் மோடியின் வளர்ச்சி தொடர்பான அணுகுமுறை பாஜக தலைவர்களிடம் இல்லை என கொந்தளித்திருந்தார்.
இதனிடையே பாஜகவில் இருந்து விலகிய ராஜீவ் ரஞ்சன், நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியூவில் இணைவார் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஜேடியூவில் இருந்து பாஜகவுக்கு வந்தவர்; அதனால் மீண்டும் ஜேடியூவுக்கே திரும்புவார் என்கின்றன பாஜக வட்டாரங்கள்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications