கலங்க வைக்கும் செய்தி..மகன் உடலை வழங்க ரூ.50000 கேட்ட மருத்துவமனை! தெருவில் பிச்சையெடுத்த பெற்றோர்!
பாட்னா: பீகாரில் மாயமான மகன் இறந்த நிலையில் அவரது உடலை வழங்க அரசு மருத்துவமனை ஊழியர் ரூ.50 ஆயிரம் கேட்டதாக கூறி ஏழை தம்பதி தெருத்தெருவாய் கையேந்தி பிச்சை எடுத்த சம்பவம் நடந்துள்ளது.
பீகார் மாநிலம் சமஸ்திபூர் மாவட்டத்தை சேர்ந்தர் மகேஷ் தாகூர். இவருக்கு மனைவி, மகன் இருந்தனர். இந்நிலையில் மகேஷ் தாகூரின் மகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தான் மாயமான அவரது மகன் இறந்துபோய் விட்டதாகவும், அவரது உடல் சாதர் அரசுமருத்துவமனையில் இருப்பதாகவும் மகேஷ் தாகூருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் மருத்துமவமனைக்கு சென்றுள்ளார். அங்கு உடலை கேட்டுள்ளனர்.

ரூ.50 ஆயிரம் கேட்பு
அப்போது ரூ.50 ஆயிரம் கொடுத்தால் தான் உடலை வழங்குவதாக கூறியதாக தெரிகிறது. நாங்கள் மிகவும் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள். தங்களிடம் பணம் இல்லை எனவும் இவர்கள் கூறியுள்ளனர். இருப்பினும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த அந்த தம்பதி பிச்சை எடுத்து ரூ.50 ஆயிரம் திரட்ட முடிவு செய்தனர்.

மனைவியுடன் பிச்சை
அதன்படி மகேஷ் தாகூர் தனது மனைவியுடன் சேர்ந்து தெருத்தெருவாக சென்று கையேந்தி பிச்சை எடுத்தார். இதுபற்றி மகேஷ் தாகூர் கூறுகையில், ‛‛மாயமான என் மகன் இறந்ததாகவும், உடல் சாதர் மருத்துவமனையில் இருப்பதாகவும் போன் வந்தது. மருத்துவமனை ஊழியர் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் உடலை தருவதாக கூறினார். ஏழையான எங்களால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது. இதனால் பிச்சை எடுக்கிறேன்'' என்றார்.

வெளியான வீடியோ
இதற்கிடையே இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவ துவங்கியது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதுபற்றி டாக்டர் சவுத்ரி கூறுகையில், ‛‛இதுபற்றி விசாரணை நடத்ி தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.

தவறாக புரிந்து கொண்ட குடும்பம்
இதற்கிடையே இந்த குற்றச்சாட்டை மாவட்ட கூடுதல் கலெக்டர் விஜய் குமார் ராய் மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இது மாவட்ட நிர்வாகத்தின் புகழை கெடுக்கும் வகையில் பரப்பபடுகிறது. அந்த நபரின் உடல் பிரேத அறையில் உள்ள நிலையில் போலீசாரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் 72 மணிநேரத்துக்கு பிறகு தான் உடல் கிடைக்கும். அதற்கு முன்பு ரூ.50 ஆயிரம் கொடுத்தாலும் யாராலும் உடலை உங்களிடம் ஒப்படைக்க முடியாது என தெரிவித்துள்ளனர். இதுபற்றி உடல் கிடைக்காது என கூறியுள்ளார். இதனை அந்த குடும்பம் தவறாக புரிந்து கொண்டுள்ளது'' என்றார்.












Click it and Unblock the Notifications