பீகார் பாஜகவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நிதிஷ்.. காலியாகும் காங்கிரஸ்.. சிஎன்என் கணிப்பு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. நிதிஷ் பாஜக கூட்டணி, தேஜஸ்வி காங்கிரஸ் கூட்டணி களத்தில் சீறிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரும் போட்டியாளராக தன்னுடைய முதல் தேர்தலை சந்திக்கவுள்ளார். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. சிஎன்என் நியூஸ் 18 வெளியிட்டுள்ள கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 6 ஆம் தேதி 121 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. முதல் கட்ட தேர்தலில் 64.66 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. இன்று (நவம்பர் 11) 122 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி 67.14 சதவீதம் வாக்குப்பதிவாகியுள்ளது.

Bihar election 2025 exit poll results Bihar assembly election

பீகார் தேர்தல் களம்

சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது தேசியளவில் மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அங்கு மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.

பரபரக்கும் களம்

மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. அதேபோல பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் பீகார் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.

வாக்கு எண்ணிக்கை

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பின் சில முடிவுகளில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. வாக்கு சதவீத அடிப்படையில் பாஜக, அதற்கு அடுத்து ஆர்ஜேடி அதிக வாக்குகளை பெறும் என கூறப்பட்டது. முதல்வர் தேர்வில் தேஜஸ்வி யாதவுக்கு அதிகம் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டது. 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை கிடைக்கும். வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு

இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. சிஎன்என் நியூஸ் 18 (CNN News 18) முதல் கட்ட தேர்தல் நடந்த 121 தொகுதிகளுக்கான கணிப்பை வெளியிட்டுள்ளது. இதில் ஜேடியூ - பாஜக கூட்டணி 60-70 தொகுதிகளிலும், ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி 45 - 55 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தொகுதிகள்

தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை நிதிஷ்குமாரின் ஜேடியூ 35-45 தொகுதிகளிலும் பாஜக 20-30 தொகுதிகளிலும், எல்ஜேபி 0-5 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறியுள்ளனர். இந்தியா கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி கட்சி 25-35 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5-10 தொகுதிகளிலும், கம்யூனிஸ்ட்கள் 10-15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

நிதிஷ் சர்ப்ரைஸ்

பிரசாந்த் கிஷோர் உள்ளிட்ட மற்றவர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறியுள்ளனர். கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமாரின் ஜேடியூவை விட பாஜக அதிக வாக்குகளை வாங்கியிருந்தது. இந்தமுறை நிதிஷின் ஜேடியூ கட்சி பாஜகவை விட அதிக வாக்குகளை பெறுவது, அந்தக் கூட்டணிக்கு திருப்புமுனையாக வெற்றியை தேடி கொடுக்கும் என்று நியூஸ் 18 கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+