பிரசாந்த் கிஷோர் வெளியிட்ட முக்கிய தகவல்.. ஆட்டம் காணும் பீகார் தேர்தல் களம்
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் உச்சகட்ட பரபரப்பில் உள்ளது. நிதிஷ் பாஜக கூட்டணி, தேஜஸ்வி காங்கிரஸ் கூட்டணி களத்தில் முட்டி மோதிக் கொண்டிருக்கின்றன. அவர்களுடன் பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஜன்சுராஜ் என்கிற கட்சி மூலம் தேர்தலை சந்திக்கவுள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து மனம் திறந்துள்ள பிரசாந்த் கிஷோர், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி இல்லவே இல்லை என்று உறுதிபட தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. அங்கு இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த நவம்பர் 6 ஆம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. 64.66 சதவீதம் வாக்கு பதிவாகியிருந்தது. நாளை (நவம்பர் 11) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

பீகார் தேர்தல் களம்
தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை பீகாரில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்துள்ளது. சுமார் 66 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட நிலையில், பீகாரில் மொத்தம் 7.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.
மறுபக்கம் ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிப்பதற்கு முயற்சி செய்கிறது. அதேபோல பிரபல தேர்தல் வகுப்பாளரும், ஜன்சுராஜ் கட்சி தலைவருமான பிரசாந்த் கிஷோரும் களத்தில் உள்ளார். 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னோட்டமாக இருக்கும் என்பதால் பீகார் தேர்தல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது.
பிரசாந்த் கிஷோர் அரசியல்
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் நிதிஷ்குமாரின் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமான முடிவுகள் வந்துள்ளன. ஜேவிசி வெளியிட்ட கணிப்பில் அந்தக் கூட்டணி 120-140 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தேஜஸ்வியின் ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி 93 - 112 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி 6-7 சதவீதம் வாக்கை பெற வாய்ப்புள்ளது. அங்கு கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், பிரசாந்த் கிஷோர் கட்சி பெறும் வாக்குகளும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகும் பீகார் அரசியலில் மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி இல்லை
பிரசாந்த் கிஷோர் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இருவரையும் விமர்சித்து வருகிறார். இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள ஒரு பேட்டியில், "பீகார் மக்கள் இப்போது மாற்றத்திற்கு தயாராகவில்லை என்றால், நாங்கள் அடுத்த 5 வருடங்கள் அவர்களுடன் பயணித்து மிகவும் தீவிரமாக பணியாற்றி மீண்டும் முயற்சி செய்வோம்.
எங்கள் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரலாம் அல்லது எதிர்க்கட்சி வரிசையில் இருக்கலாம். ஆனால் அரசில் அங்கம் வகைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் இன்னொரு சட்டமன்ற தேர்தலை கூட எதிர்கொள்ள தயாராக உள்ளோம். நாங்கள் பாஜகவின் சித்தாந்தத்தை முழுமையாக எதிர்க்கிறோம். மோடி பீகாரில் ஓட்டு வாங்கிவிட்டு, குஜராத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.
அவசரம் இல்லை
எங்களின் ரத்தத்தை வியர்வையாக சிந்தி கட்சியை உருவாக்கியுள்ளோம்.எனக்கு 48 வயதாகிறது. இன்னும் நேரம் உள்ளது. எந்த அவசரமும் இல்லை. இந்த தேர்தலில் போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றால், மீண்டும் அடுத்த தேர்தலில் முயற்சி செய்வோம். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை." என்றார்.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications