27, 30 என.. வெறும் 100 வாக்குகளில் வெற்றியை இழந்த வேட்பாளர்கள்! பீகார் தேர்தல் சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் சில வேட்பாளர்கள் வெறும் 27, 30 என 100 வாக்குகளுக்குள் வெற்றி வாய்பை இழந்திருக்கின்றனர். இது குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் இருக்கின்றன. இந்த தொகுதிகளுக்கு நவ.6 மற்றும் நவ.11 இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றன. இதனையடுத்து நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஆனால் இந்த முறை தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி, வெற்றி குறித்து நம்பிக்கை வைத்திருந்தது. காரணம், கடந்த தேர்தலை விட இந்த முறை அதிக அளவில் மக்கள் வாக்களித்தனர். வாக்கு சதவிகிதம் அதிகமாக இருந்தால் வெற்றி நிச்சம் என்று எண்ணியிருந்தார்.

Bihar Election 2025 2025 Bihar Election Results 2025 2025

ஆனால் தபால் வாக்குகள் எண்ணிக்கையிலேயே அவரது கனவு பொய்யானது. தபால் வாக்குகள் எண்ணிக்கையில் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்றது. அதேபோல மின்னணு வாக்கு எண்ணிக்கையிலும் என்டிஏ கூட்டணி முன்னிலை பெற்று இறுதியில் வெற்றியும் பெற்றது. இந்நிலையில் இந்த தேர்தலில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் மூன்று வேட்பாளர்கள் 100 வாக்குகளுக்கும் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

அகியான் சட்டமன்ற தொகுதி
சந்தேஷ் சட்டமன்ற தொகுதி
ராம்கர் சட்டமன்ற தொகுதி

இந்த தொகுதிகளில்தான் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கின்றனர். இதில் அகியான் தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (ML)-ன் கோட்டையாக இருந்த தொகுதியாகும். இங்கு கடந்த 2020 மற்றும் 2024ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தல்களில் இந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் முறையே 61.39%, 53.03% என்கிற வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கின்றனர். கடந்த முறை ஜெயித்த ஷிவ் பிரகாஷ் ரஞ்சன்தான் இந்த முறையும் களமிறங்கினார். அவரை எதிர்த்து பாஜகவின் மகேஷ் பஸ்வான் போட்டியிட்டார்.

மகேஷ் பஸ்வான் - 69,412
ஷிவ் பிரகாஷ் ரஞ்சன் - 69,317
வாக்கு வித்தியாசம் - 95

என்கிற விகிதத்தில் பாஜக வேட்பாளர் மகேஷ் பஸ்வான் வெற்றி பெற்றிருக்கிறார்.

ராம்கர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை, கடந்த 2000 -2010 என 10 ஆண்டுகள் இந்த தொகுதியில் ராஷ்டிரிய ஜனதா தளம்தான் கோலோச்சி வந்திருக்கிறது. ஆனால் அதன் பின்னர் பாஜக vs ராஷ்டிரிய ஜனதா தளம் என களம் மாறியது. இந்நிலையில் இந்த முறை பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த சதீஷ் குமார் சிங் யாதவ் என்பவர் வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் அசோக் குமார் சிங் 30 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.

சதீஷ் குமார் சிங் - 72,689 (37.31%)
அசோக் குமார் சிங் - 72,659 (37.29%)
வாக்கு வித்தியாசம் - 30

சந்தேஷ் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை, கடந்த 2015-2020 காலங்களில் இது ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின்(ஆர்ஜேடி) கோட்டையாக இருந்தது. இந்த முறை ராஷ்டிரிய ஜனதா தளம் vs ஐக்கிய ஜனதா தளம் என போட்டி இருந்தது. ஆர்ஜேடி சார்பில் தீபு சிங் என்பவரும், ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ராதா சரன் ஷா என்பவரும் களமிறங்கினர். இதில் ராதா சரன் ஷா 27 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ராதா சரன் ஷா - 80,598
தீபு சிங் - 80,571
வாக்கு வித்தியாசம் - 27

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+