பீகார் தேர்தலில் பதற்றம்.. லாலு கட்சி பலமாக உள்ள வாக்குச்சாவடிகளில் திடீர் மின்வெட்டு!
பாட்னா: பீகார் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வலுவாக உள்ள தொகுதிகளில் இருக்கும் வாக்குச்சாவடிகளில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.
ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசரி ஆகிய கட்சிகள் 'மகாபந்தன்' கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இந்நிலையில், இந்த கூட்டணி கட்சிகளின் கோட்டையாக கருதப்படும் வாக்குச்சாவடிகளில் இடையூறு ஏற்பட்டதாகவும், வாக்குப்பதிவை தாமதப்படுத்தும் நோக்கில் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் கூட்டணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது சதி செயல் என்றும், தங்களது குற்றச்சாட்டின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. பீகார் தலைமை தேர்தல் அதிகாரி இது குறித்து கூறுகையில், "குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் தேர்தல் முறைகேடு நடந்ததாக ராஷ்டிரிய ஜனதா தளம் எழுப்பிய குற்றச்சாட்டு முற்றிலும் ஆதாரமற்றது, தவறானது. பீகாரில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு சீராக நடைபெற்று வருகிறது. தேர்தல் செயல்முறை நியாயமாகவும், வெளிப்படையாகவும், தடையில்லாமலும் இருப்பதை உறுதிசெய்ய இந்திய தேர்தல் ஆணையம் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் பின்பற்றுகிறது. இதுபோன்ற தவறான பிரச்சாரத்திற்கு ஆதாரம் இல்லை" என்று கூறியிருக்கிறார்.
பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 121 தொகுதிகளில் இன்று முதல்கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 3.75 கோடி வாக்களார் வாக்களிக்கின்றனர். ஒரு திருநங்கை வேட்பாளர், 122 பெண் வேட்பாளர்கள் உட்பட மொத்தம் 1,314 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் நேரடியான போட்டி ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கும் இடையேதான் என்றாலும், பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி மற்றும் ஓவைசியின் கட்சி இரண்டும் கணிசமான அளவில் வாக்குகளை பிரிக்கும் என்று சொல்லப்படுகிறது.
முதல்கட்டமாக தேர்தல் நடைபெறும் 121 தொகுதிகளில், திஹாவில் அதிகபட்சமாக சுமார் 4.58 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். ஷேக்க்புரா மாவட்டத்தில் உள்ள பார்பிகா தொகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையாக 2.32 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். குர்ஹானி மற்றும் முசாபர்பூரில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 3.75 கோடி வாக்காளர்களுக்காக தேர்தல் ஆணையம் 45,341 வாக்குச்சாவடிகளை அமைத்துள்ளது. மொத்த வாக்காளர்களில் 10.72 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications