பீகாரில் 243 தொகுதிகள் முடிவை அறிவித்தது தேர்தல் ஆணையம்: பாஜக-ஜேடியூ அமோக வெற்றி
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் 243 தொகுதிகளுக்குமான முடிவை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் 125 இடங்களில் வென்றுள்ளது.
பீகாரில் 10 தொகுதிகளில் 1,000க்கு கீழ் வெற்றி - தோல்வி வாக்கு வித்தியாசம். ஹில்சா தொகுதியில் ஜேடியூ வேட்பாளர், ஆர்ஜேடி வேட்பாளரைவிட 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராம்கார் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர், பகுஜன் சமாஜ் வேட்பாளரைவிட 189 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். பிரபத்தா தொகுதியில் ஜேடியூ வேட்பாளர், ஆர்ஜேடி வேட்பாளரைவிட 951 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். மயிதானி தொகுதியில் எல்ஜேபி வேட்பாளர், ஜேடியூ வேட்பாளரைவிட 333 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
லண்டனில் இருந்து பீகார் திரும்பி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட புளூரல்ஸ் கட்சித் தலைவர் புஷ்பம் பிரியா சவுத்ரி நோட்டாவை விட குறைவான வாக்குகளை பெற்றிருக்கிறார். தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்து தேர்தலை சந்தித்த புஷ்பம் பிரியா சவுத்ரி 3,575 வாக்குகள் மட்டுமே பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications