அவருக்கும் எங்களுக்கும் தான் போட்டியே! BJP Vs JD(U).. பரபரப்பான பீகார் தேர்தல் களம்! காங்கிரஸ் பாவம்
பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலில் என்டிஏ Vs இந்தியா கூட்டணி இடையேயான போட்டி என்பது மாறி தற்போது, என்டிஏ கூட்டணியில் இருக்கும் பாஜக Vs ஜேடியு இடையேயான போட்டியாக மாறி இருக்கிறது. 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கும் நிலையில் ஆர்ஜேடியும் கிட்டத்தட்ட 80 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. இதனால் பீகாரின் தனிப்பெரும் கட்சியாக மாறப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே பீகார் சட்டசபை தேர்தல் நிறைவடைந்து இருக்கிறது. நவம்பர் 6 மற்றும் 11ம் தேதிகளில் இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், பீகார் வரலாற்றில் இல்லாத வகையில் சுமார் 69 சதவீத வாக்குகள் பதிவானது.

பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்கு எண்ணிக்கையின் போதும், வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கையின் போதும், ஜேடியு பாஜக கூட்டணியான என்டிஏ கூட்டணியே முன்னிலையில் இருந்து வருகிறது.
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை
ஆரம்பத்தில் 90 தொகுதிகள் வரை முன்னிலையில் இருந்த ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணியான மகாபந்தன் கூட்டணி அதற்கு பிறகு கடும் பின்னடைவை சந்தித்தது. தற்போதைய சூழலில் மகாபந்தன் கூட்டணி எனப்படும் தேசிய அளவிலான இந்தியா கூட்டணி வெறும் 35-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. அதிலும் குறிப்பாக லாலு பிரசாத் யாதவின் தற்போது தேஜஸ்வி யாதவை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி இருக்கும் ஆர்ஜேடி 25-க்கும், மேற்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் வெறும் 4 தொகுதிகளிலும், சிபிஐ மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
பாஜக ஜேடியூ போட்டி
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்த தேர்தலில் களம் கண்ட பிரசாந்த் கிஷோரின் ஜான் சூராஜ், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை கடும் பின்னடைவை சந்தித்துள்ளன. இந்த கட்சிகள் ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை விட அதிக தொகுதிகளில் என்டிஏ கூட்டணி முன்னிலையில் வகிக்கிறது.
காங்கிரஸ் பின்னடைவு
இதுவரை வெளியாகி உள்ள முன்னிலை நிலவரங்களின்படி பாஜக 890க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது. நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் சுமார் 80க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எல்ஜேபி கட்சி 23 தொகுதிகளிலும், ஹச்ஏஎம் கட்சி 4 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. இந்த முடிவுகளின் படி கிட்டத்தட்ட 200 தொகுதிகளுக்கு மேல் பாஜக கூட்டணி வெல்லலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. எதிர்க்கட்சி என்ற ஒன்று அங்கு இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தனிப்பெரும் கட்சி எது?
தற்போதைய சூழல் படி பாஜக ஜேடியூ கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி ஆகிவிட்டது. ஆட்சி அமைக்க தேவையான 122 என்ற மேஜிக் நம்பரை நிதீஷ்குமார் - பாஜக கூட்டணி தாண்டிவிட்ட நிலையில் அதைவிட அதிகமாக எவ்வளவு சீட்டுகள் கிடைக்கிறது என்பதுதான் தற்போதைய கேள்வி. இது ஒரு புறம் இருக்க, இந்தியா Vs என்டிஏ என்ற போட்டி மாறி, பாஜக Vs ஜேடியூ என்ற போட்டி கூட்டணிக்குள்ளயே உருவாகி இருக்கிறது. தனிப்பெரும் கட்சியாக எந்த கட்சி உருவெடுக்கப் போகிறது என்ற விவாதம் தற்போது எழுந்திருக்கிறது.
நிதீஷ் குமார் பாஜக
தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் படி பாஜக 91 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. ஜேடியூ 80 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. மாநில அரசியல் கட்சி, நீண்ட காலம் முதல்வராய் இருந்த நிதீஷ் குமாரை தலைமையாக கொண்ட ஜேடியூ 80க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், மத்தியில் ஆட்சி அமைக்க நிதிஷ் குமாரை நம்பி இருக்கும் பாஜக 90க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. பீகார் மாநிலத்தில் வலுவாக பாஜக காலூன்றி இருப்பதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன. அதே நேரத்தில் கூட்டணியில் இருந்தாலும், தேசிய கட்சியா? மாநில கட்சியா? என்ற போட்டி உருவாகி உள்ளது தேசிய அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.












Click it and Unblock the Notifications