திருமணத்துக்கு பிறகும் காதலனை விரும்பிய மனைவி.. ஆசையை நிறைவேற்றி வைத்த கணவர்.. லிஸ்ட்லயே இல்லையே

Subscribe to Oneindia Tamil

இதனை கணவர் ராஜேஷ் குமார் மற்றும் மாமியார் கவனித்தனர். அவரிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்காமல் மழுப்பி கொண்டே இருந்தார். இந்நிலையில் தான் இரவு நேரத்தில் ராஜேஷ் குமாரின் வீட்டுக்கு யாரோ ஒருவர் வந்து செல்வது தெரியவந்தது. பாட்னா: மனைவியின் ஆசையை ஒவ்வொரு கணவனும் நிறைவேற்றி வருகின்றனர் அல்லது நிறைவேற்ற முயல்கின்றனர். ஆனால் பீகாரில் மனைவியின் ஆசையை நிறைவேற்ற அந்த பெண்ணின் கணவர் செய்த செயல் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம் லகிசாராய் மாவட்டத்தில் உள்ள ராம்கார்க் சவுக் பிளாக்கை சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவருக்கு குஷ்பு குமாரி என்பவருக்கும் கடந்த 2021ம் ஆண்டில் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் தான் குஷ்பு குமாரியின் நடத்தையில் சில மாதங்களாக மாற்றம் ஏற்பட்டுள்ளது.

bihar marriage

இதனை கணவர் ராஜேஷ் குமார் மற்றும் மாமியார் கவனித்தனர். அவரிடம் கேட்டபோது அவர் சரியாக பதிலளிக்காமல் மழுப்பி கொண்டே இருந்தார். இந்நிலையில் தான் இரவு நேரத்தில் ராஜேஷ் குமாரின் வீட்டுக்கு யாரோ ஒருவர் வந்து செல்வது தெரியவந்தது.

இதுபற்றி ராஜேஷ் குமாரின் தாய் அறிந்தார். இந்நிலையில் தான் சம்பவத்தன்று வீட்டில் உள்ள அறையில் குஷ்பு குமாரி ஆண் ஒருவருடன் பேசி கொண்டிருந்தார். இதனை அவரது மாமியார் பார்த்துவிட்டார். இதையடுத்து அந்த நபர் வீட்டை விட்டு வெளியே ஓடிவிட்டார். இதையடுத்து தான் பிரச்சனை வெடித்தது. இந்த தகவல் ராஜேஷ் குமாரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர் மனைவி குஷ்பு குமாரியிடம் விசாரித்தார். அப்போது தான் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

அதாவது வீட்டுக்கு வந்து சென்ற நபரின் பெயர் சந்தன் குமார். அவர் யார் என்றால் குஷ்பு குமாரியின் சிறுவயது நண்பர். இளம் வயதில் காதலர். இருவரும் காதல் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் அதற்குள் குஷ்பு குமாரியை கட்டாயப்படுத்தி அவரது குடும்பத்தினர் ராஜேஷ் குமாருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமணத்துக்கு பிறகு மீண்டும் குஷ்பு குமாரிக்கு காதலன் சந்தன் குமாரின் நியாபகம் வந்துள்ளது.

இதனால் அடிக்கடி இருவரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். அதன்பிறகு இரவு நேரத்தில் அவ்வப்போது சந்தன் குமாரை வீட்டுக்கு வரைவைத்து குஷ்பு குமாரி சந்தித்தது தெரியவந்தது. இதை கேட்டு ராஜேஷ் குமார் கோபமடையவில்லை. மாறாக அவர் தனது மனைவி குஷ்பு குமாரியை அவரது ஆசைப்படியே காதலன் சந்தன் குமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.

இதையடுத்து சந்தன் குமார் - குஷ்பு குமாரியை அவர் ஊரில் உள்ள அனைவருக்கும் அறிமுகப்படுத்தியதோடு, ‛‛இவர்கள் 2 பேரும் விரும்புகின்றனர். அவர்களின் விருப்பத்துக்கு குறுக்கே நான் நிற்க விரும்பவில்லை. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளேன்'' என அறிவித்தார். அதுமட்டுமின்றி இருவரையும் அருகே உள்ள கோவிலுக்கு அழைத்து சென்று திருமணமும் செய்து வைத்து அட்சதை தூவி ‛‛எங்கிருந்தாலும் வாழ்க'' என்று வாழ்த்தியுள்ளார்.

திருமணத்துக்கு பிறகு மனைவி ஆசையாக கேட்கும் பொருட்களையே பல கணவர்கள் வாங்கி கொடுக்க மறுக்கும் சூழலில் மனைவி ஆசைப்பட்டார் என்பதற்காக அவரை காதலனுடன் சேர்த்து வைத்த சம்பவம் பீகாரில் தற்போது பேசும் பொருளாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+