பெருங்கொடுமை! நீட் வினாத் தாள் லீக் கும்பலுக்கு தலைவரே 'பீகார் அமைச்சர்'தானாம்- பகீர் வாக்குமூலம்!
பாட்னா: நாட்டையே அதிரவைத்துக் கொண்டிருக்கும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே விற்பனை செய்யப்பட்ட கும்பலின் தலைவராக பீகார் மாநிலத்தில் ஆளும் பாஜக கூட்டணி அரசின் அமைச்சர் ஒருவர்தான் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் பகீர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. முன்னெப்போதும் இல்லாத வகையில் நீட் நுழைவுத் தேர்வில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக ஒவ்வொரு நாளும் அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன.

பீகார் மாநிலத்தில் நீட் நுழைவுத் தேர்வு நடப்பதற்கு முன்னரே ரூ.30 லட்சத்துக்கு ஒரு வினாத் தாள் விற்பனை செய்யப்பட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. அதுவும் மாணவர்கள் தரும் தொகையைப் பொறுத்து நீட் வினாத்தாள் ஒரு நாள் முன்னதாக, தேர்வுக்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாக என விற்பனை செய்யப்பட்டுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் பீகார் மாநில பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி பலரை கைது செய்துள்ளனர். இதில் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 9 மாணவர்களை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி இருக்கின்றனர் போலீசார்.
நீட் வினாத்தாள் விற்பனை செய்த கும்பலின் முக்கிய நபராக கருதப்படும் சிக்கந்தர் போலீசில் கொடுத்துள்ள வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவர்களுக்கு நீட் வினாத் தாள் விற்பனை செய்வதற்காக தமக்கு தங்கும் விடுதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையுமே செய்து கொடுத்தது பீகார் மாநில அமைச்சர் ஒருவர்தான் என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளாராம் சிக்கந்தர். நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவராக பீகாரில் ஆளும் பாஜக-ஜேடியூ அரசின் அமைச்சர் ஒருவர்தான் செயல்பட்டிருப்பதாக சிக்கிய சிக்கந்தர் கொடுத்த வாக்குமூலம் அரசியல் வட்டாரங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் கடுமை காட்டி வருகிறது. இந்த முறைகேடுகளைத் தொடர்ந்து கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநில அரசுகள் நீட் தேர்வு முறையையே ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாட்டைப் போலவே குரல் கொடுத்து வருகின்றன. பீகார், மேற்கு வங்கம், டெல்லி என பல மாநிலங்களிலும் மாணவர்கள் போராட்டங்களில் குதித்திருக்கின்றனர். இந்த நிலையில் பீகார் மாநில பாஜக-ஜேடியூ அரசின் அமைச்சர்தான் நீட் வினாத்தாள் விற்பனை கும்பலின் தலைவர் என்பது பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications