பால் பொருள் உற்பத்தி ஆலையில் விஷவாயு கசிவு..ஒருவர் பலி, 35 பேர் மயக்கம்.. பீகாரில் பரபரப்பு
பாட்னா: பீகார் மாநிலத்தின் வைஷாலி உள்ள மாவட்டத்தில் உள்ள பால் பொருள் உற்பத்தி தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்ததில் ஒரு தொழிலாளி உயிரிழந்தார். இதில் பாதிக்கப்பட்ட 35 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ராஜ் ஃப்ரெஷ் டெய்ரியில் உள்ள அம்மோனியம் சிலிண்டரில் இருந்து விஷ வாயு கசிந்தது. இந்த கோர சம்பவத்தில் ஒரு தொழிலாளர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.மேலும் ஏராளமானோர் மயக்கம் அடைந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தீயணைப்பு துறையினர் உடனடியாக விஷவாயு கசிவதை தடுத்து நிறுத்தினர். மேலும் அங்கு பாதிக்கப்பட்டிருந்த 35 பேரை ஹாஜிபூர் சதர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே சதார் மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் ஷியாம் நந்தன் பிரசாத் கூறும் போது, விஷ வாயு தாக்கியதால் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் 30 முதல் 35 பேர் வரை மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களது உடல் நிலையை கண்காணித்து வருகிறோம். அவர்கள் உடல் நிலை சீராக உள்ளது என்று கூறினார்.
இதனிடையே விபத்து குறித்து பீகாரின் தீயணைப்பு துறை டிஎஸ்பி,டாக்டர் அசோக்குமார் கூறுகையில், "ராஜ் ஃப்ரெஷ் டெய்ரி நிறுவனத்தில் இருந்து அம்மோனியம் சிலிண்டரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது.
நிலைமையை கட்டுப்படுத்த பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம். கசிவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம். தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது" இவ்வாறு கூறினார்.
இதனிடையே பீகார் மாநிலம் பாகல்பூரின் பாபர்கஞ்ச் பகுதியில் மர்மமான முறையில் வெடித்த குண்டுவெடிப்பில் ஒருவர் இறந்தார். இதில் மூன்று பேர் காயமடைந்தனர்.
பாகல்பூர் எஸ் எஸ்பி ஆனந்த் குமார், இதுபற்றி கூறுகையில், நேற்று மாலையில் சிலிண்டர் வெடித்ததாக தகவல் கிடைத்தது. FSL, SDRF மற்றும் தீயணைப்பு குழுவினருடம் சம்பவ இடத்திற்கு சென்றோம்.குண்டுவெடிப்புக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரித்து வருகிறோம். குண்டுவெடிப்பால் ஏற்பட்ட குப்பைகளை அகற்றும் பணி நடந்து வருகிறது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications