Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேட்புமனு தாக்கல் நிறைவு.. தொங்கலில் தொகுதி பங்கீடு! சொதப்பும் லாலு கட்சி தலைமையிலான கூட்டணி

Subscribe to Oneindia Tamil

பாட்னா: அடுத்த மாதம் பீகாரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் (வெள்ளிக்கிழமை) நிறைவடைந்திருக்கிறது. இருப்பினும் தற்போது வரை லாலு பிரசாத் யாதவ் கட்சி தலைமையிலான மகாபந்தன் கூட்டணி தொகுதி பங்கீட்டை உறுதி செய்யவில்லை.

பீகார் சட்டமன்றத் தேர்தலின் முதல் கட்டத்திற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை முடிவடைந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி களமிறங்கத் தயாராக உள்ளது. அவர்களின் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்து, பிரச்சாரத் திட்டத்தையும் வெளியிட்டிருக்கிறார்கள். மறுபுறம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான எதிர்க்கட்சிகளின் 'மகாகத்பந்தன்' எந்தத் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பது குறித்து இன்னும் இறுதி முடிவை எட்டவில்லை. பீகாரை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவுகிறது.

Bihar Election 2025 Bihar

1. என்டிஏ கூட்டணி
2. மகாகத்பந்தன் கூட்டணி
3. ஜன் சுவராஜ்

இதில் என்டிஏ என்பது பாஜக தலைமையிலான கூட்டணியாகும். பீகாரில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் மகாகத்பந்தன் என்கிற பெயரில் கூட்டணி அமைத்திருக்கின்றன. இது இரண்டை தவிர, தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுவாராஜ் என்கிற தனது கட்சியை இந்த தேர்தலில் களமிறக்கியுள்ளார்.

தற்போது முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நிறைவடைந்துள்ளது. இருப்பினும் காங்கிரஸும், ராஷ்டிரிய ஜனதா தளமும் இன்னமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. மகாபந்தன் கூட்டணித் தலைவர்கள், இந்த தாமதத்தை கூட்டணி விரிவடைவதற்கான அறிகுறியாகக் கருதுகின்றனர். "ஒற்றுமை என்பது வேகத்தை விட முக்கியம்" என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கன்னையா குமார் கூறியுள்ளார். இறுதி பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மற்றொரு தலைவர் பவன் கெரா இது குறித்து கூறுகையில், "தேர்தல் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டியவர்கள் செய்துள்ளனர். விரைவில் நிலைமை தெளிவாகிவிடும். பீகாரில் மகாகத்பந்தன் அரசுதான் அமையும். NDA ஏன் கேள்விகளை எழுப்புகிறது? அவர்கள் தங்கள் நிலையைக் குறித்து சிந்திக்க வேண்டும்," என்று கெரா கூறியுள்ளார்.

சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கூறுகையில், "கூட்டணியில் குழப்பம் இருப்பதாக மக்கள் உணரலாம். ஆனால், இந்த முறை அதிகமான கட்சிகள் இணைந்திருப்பதாலேயே வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இது சிதைவுக்கான அறிகுறி அல்ல" என்று கூறியுள்ளார்.

கடந்த 2020-ல் தனது கட்சி போட்டியிட்ட 19 இடங்களில் 12-ல் வெற்றி பெற்றதாகவும், இந்த முறையும் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும் என்றும் பட்டாச்சார்யா குறிப்பிட்டார். இந்த ஆண்டு மகாகத்பந்தனில் 2020-ஐ விட அதிகமான கட்சிகள் இணைந்துள்ளன. அப்போது RJD, காங்கிரஸ் மற்றும் மூன்று இடதுசாரி கட்சிகள் (சிபிஐ (எம்எல்), சிபிஐ, சிபிஐ (எம்)) மட்டுமே இருந்தன.

தற்போது முகேஷ் சஹானியின் விகாஷீல் இன்சான் கட்சி கூட்டணியில் இணைந்துள்ளது. ஹேமந்த் சோரனின் ஜேஎம்எம் சில எல்லைப் பகுதிகளில் போட்டியிட விரும்புவதால், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுவதற்கு முன்பே, காங்கிர 48 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இது அதன் பொறுமையின்மையையும், தன்னம்பிக்கையையும் காட்டுகிறது.

தொகுதி பங்கீட்டில் தாமதம் என்பது பீகாரில் எதிர்க்கட்சிகளுக்கு இது முதல் முறை அல்ல. கடந்த 2020-ல் RJD மற்றும் காங்கிரஸ் கடைசி நிமிடம் வரை முக்கிய தொகுதிகள் குறித்து கருத்து வேறுபாடு கொண்டிருந்தன. இருப்பினும், அந்த கூட்டணி சிறந்த தேர்தல் முடிவுகளை எட்டியது, NDA-வை வீழ்த்துவதில் சற்று பின்னடைந்தது. 243 தொகுதிகளில் 110 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேஜஸ்வி யாதவின் RJD சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

இடதுசாரிக் கட்சிகள் கூட்டணியின் ஒரு பகுதியாகப் போட்டியிட்டு சிறப்பாக செயல்பட்டன. குறிப்பாக சிபிஐ-எம்எல் 12 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்றது. இந்த முன்னுதாரணம், தாமதம் குறித்து தலைவர்கள் கவலைப்படாமல் இருக்கக் காரணமாக இருக்கலாம்.

என்டிஏ கூட்டணியை பொறுத்தவரையில், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக தலா 101 இடங்களில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள இடங்களை எல்ஜேபி (ராம் விலாஸ்), ஆர்எல்எம், மற்றும் எச்ஏஎம் ஆகிய கூட்டணிக் கட்சிகள் பகிர்ந்து கொள்கின்றன. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான 40 பேர் கொண்ட பாஜகவின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியாகியிருப்பது தீவிரமான பிரச்சாரத்தைக் குறிக்கிறது.

முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14-ம் தேதியும் நடைபெறும். இப்போதைக்கு, NDA-விற்கு ஆரம்பத்தில் ஒரு சாதகம் இருக்கலாம். ஆனால் மகாகத்பந்தனின் தாமதமான தொடக்கம் இறுதி முடிவுகளை பாதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+