பீகார் தேர்தல்: 121 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்தது.. மாலை 5 மணியுடன் நிறைவு
பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகளைக் கொண்ட சட்டப்பேரவையில், 121 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 57.33 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தது.
முதல்கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளர்களாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், சுயேட்சை வேட்பாளரான தேஜஸ்வியின் சகோதரர் தேஜ் பிரதாப் யாதவ், பாஜகவின் சம்ராட் சௌத்ரி உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் முதன் முறையாக தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி களமிறங்குகிறது.
முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 27.65% வாக்குகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.31% வாக்குகள் பதிவாகியிருக்கின்றன. தொடர்ந்து பிற்பகல் 3 மணி நிலவரப்படி 53.77 சதவீத வாக்குகள் பதிவாகியது. இந்த நிலையில் மாலை 5 மணியுடன் பீகாரில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

முக்கிய தொகுதிகள் எது?
பாட்னா, தர்பங்கா, மாதேபுரா, சஹர்சா, முசாபர்பூர், கோபால் கஞ்ச், சீவான், சாரன், வைஷாலி, சமஸ்திபூர், பெகுசாராய், லகிசாராய், முங்கர், ஷேக்புரா, நாலந்தா, பக்சார் மற்றும் போஜ்பூர் என மொத்தம் 18 மாவட்டங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. ரகோபூர், பெகுசாராய், ககாரியா, மகுவா, உஜைர்பூர், பாட்னா சாகிப், நாலந்தா மற்றும் பக்சார் போன்ற தொகுதிகள் இந்தத் தேர்தலில் முக்கியத்துவம் பெறுகின்றன.
பாஜகவின் மூத்த தலைவர் சாம்ராட் சவுத்ரி தாராப்பூர் தொகுதியிலும், தேஜஸ்வி யாதவ் ரகோபூர் தொகுதியிலும், தேஜ் பிரதாப் மகுவா தொகுதியிலும், மைதிலி தாக்கூர் அலினகர் தொகுதியிலும், அனந்த் சிங் மொகாமா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் தகவல்படி, 10.72 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். 18-19 வயதுக்குட்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டும் 7.78 லட்சம் ஆகும்.
எந்த கட்சி எத்தனை வேட்பாளர்கள்?
தேசிய ஜனநாயகக் கூட்டணியில், ஐக்கிய ஜனதா தளம் 57 இடங்களிலும், பாஜக 48 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 14 இடங்களிலும், ராஷ்டிரிய லோக் மோர்ச்சா 2 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மகாகத்பந்தனில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 73 இடங்களிலும், காங்கிரஸ் 24 இடங்களிலும் போட்டியிடுகின்றன.
வேட்பாளர்களை பொறுத்தவரை கோபால்கஞ்ச் மாவட்டத்தின் போரே சட்டமன்ற தொகுதியில் ஜன் சுராஜ் கட்சியின் சார்பில் ஒரு திருநங்கை, வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். மொத்தம் 122 பெண் வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். மாநிலத்தை பொறுத்தவரை மும்முனை போட்டி நிலவுகிறது.
கூட்டணி கணக்கு
- தேசிய ஜனநாயக கூட்டணி
- மகாபந்தன்/இந்தியா கூட்டணி
- ஜன் சுராஜ் கட்சி
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்), மதச்சார்பற்ற இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி வைத்தது.
காங்கிரஸ் கூட்டணி
தேர்தலில் பாஜக 74 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. எனவே இந்த முறை இரு கட்சிகளும் சரிசமான தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதன் மூலம் பாஜக நிதிஷ்குமாரை ஓரம் கட்டுகிறதோ? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
மறுபுறம் இந்தியா கூட்டணியில், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), விகாஸ்ஷீல் இன்சான் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications