Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛சி-வோட்டர்’ சர்வே..பீகார் அரசியலில் ஜொலிக்கும் தேஜஸ்வி யாதவ்! நிதிஷ் குமாருக்கு கடும் பின்னடைவு!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகாரில் நிலவிய அரசியல் குழப்பத்துக்கு மத்தியில் நிதிஷ் குமார் கூட்டணியை மாற்றி மீண்டும் முதல் அமைச்சராகி உள்ளார். ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றுள்ளார். இந்நிலையில் பீகார் அரசியல் குறித்து சி வோட்டர் மேற்கொண்ட சர்வேயில் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆதரவு அதிகமாக உள்ள நிலையில் நிதிஷ் குமாருக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

பீகாரில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சி ஆட்சி நடத்தியது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் முதல் அமைச்சராக இருந்தார்.

இருகட்சி தலைவர்கள் இடையேயா வார்த்தை மோதல், கருத்து வேறுபாடு உள்ளிட்டவற்றால் இந்த கூட்டணி முறிந்தது. இதையடுத்து முதல் அமைச்சர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார்.

பீகார் எம்எல்ஏக்கள் நிலவரம்

பீகார் எம்எல்ஏக்கள் நிலவரம்

பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தற்போதைய பலம் 242 ஆக உள்ளது. ஆட்சியமைக்க 122 பேரின் ஆதரவு தேவை. இதில் ராஷ்டிரிய ஜனதாதளத்துக்கு 79, பாஜகவுக்கு 77, ஐக்கிய ஜனதாதளத்துக்கு ஐக்கிய ஜனதாதளம் 45, காங்கிரசுக்கு 19, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதுதவிர இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்க்கு 12 , இந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவுக்கு 4 ஏஐஎம்ஐஎம் கட்சி மற்றும் சுயேச்சைக்கு தலா ஒரு எம்எல்ஏக்கள் உள்ளன.

மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார்

மீண்டும் முதல்வராக நிதிஷ் குமார்

இந்நிலையில் தான் பீகாரில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வந்த லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளத்துடன் கைகோர்த்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். இந்த கூட்டணிக்கு பாஜக தவிர காங்கிரஸ் உள்பட பிற கட்சிகள் ஆதரவு வழங்கின. இதன் தொடர்ச்சியாக பீகார் முதல் அமைச்சராக நிதிஷ் குமார் நேற்று பதவி ஏற்றார். இதன்மூலம் பீகார் முதல்வராகஅவர் 8 வது முறையாக பதவியேற்றுள்ளார். ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தேஜஸ்வி யாதவ், பீகார் மாநில துணை முதல் அமைச்சராக பொறுப்பேற்றார்.

சி வோட்டர் கருத்து கணிப்பு

சி வோட்டர் கருத்து கணிப்பு

இதன் தொடர்ச்சியாக சி -வோட்டர் பீகாரில் ஒரு கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. அப்போது பீகாரின் அடுத்த முதல்வராக யார் வர வேண்டும் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு தற்போதைய முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைவர்களை காட்டிலும் லாலு பிரசாத்தின் மகனும் தற்போதைய துணை முதல் அமைச்சருமான தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது.

தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவு

தேஜஸ்வி யாதவுக்கு ஆதரவு

இந்த கருத்து கணிப்பில் பதிலளித்தவர்களில் 43 சதவீதம் பேர் தேஜஸ்வி யாதவ் தான் அடுத்த பீகார் முதல்வராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் 24 சதவீதத்தினர் மட்டுமே நிதிஷ் குமாருக்கு ஆதரவாகவும், 19 சதவீதம் பேர் பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வராக வர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் பீகாரில் நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வரும் நிலையில் தேஜஸ்வி யாதவின் புகழ் மக்கள் மத்தியில் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Recommended Video

    Nitish Kumar மீண்டும் முதலமைச்சரானார் | Bihar Politics
    பெண்கள் யார் பக்கம்?

    பெண்கள் யார் பக்கம்?

    மேலும் இந்த கருத்து கணிப்பில் பெண் வாக்காளர்கள் அதிகளவில் தேஜஸ்வி யாதவின் பக்கம் உள்ளனர். அதாவது கருத்து கணிப்பில் பங்கேற்ற பெண்களில் 41.8 சதவீதம் பேர் தேஜஸ்வி யாதவ் தான் முதல்வராக வர வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளனர். 23.8 சதவீதம் பேர் நிதிஷ் குமார் பக்கமும், 19.6 சதவீதம் பேர் பாஜகவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+