தமிழக அரசியலில் மார்ட்டின் குடும்பத்தின் 'மாஸ்டர் பிளான்'? - வைரலாகும் கே.சி.பழனிசாமியின் ட்வீட்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் எனும் ஒரு கட்சியை விஜய்யை வைத்து தொடங்க வைத்து அதிமுகவை விலைக்கு வாங்கி தமிழகத்தை தானே ஆள வேண்டும் என மார்ட்டின் ஒரு அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளார் என முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மாப்ள ஆதவ்.... நீ போயி தவெகவுக்கு பைனான்ஸ் பண்ணு....விஜய் நம்ம கைய விட்டு போயிடாத அளவுக்கு கட்சியை வளைச்சுப்போடு.

ஓகே..மாமா....
ஏம்மா..லீமா ரோஸ்..! நீ எதுக்கும் அதிமுக-வுல ஒரு துண்டைப் போட்டு வையி..!! எப்படி இருந்தாலும் கட்சி அடமானத்துக்கு வரும், கம்மியான விலைக்கு பேசி முடி....
சரிங்க....
அடேய் தம்பி சார்லஸ்.... நீ பக்கத்துல இருக்குற பாண்டிச்சேரில போயி ஒரு கட்சி ஆரம்பி., என்ன செலவானாலும் நீதான் அங்க CM ஆகனும்....
சரிங்கப்பா....!!
விஜய் என்கிற சுயமோகியை வளைத்து போட்டு ஒரு கட்சியைத் தொடங்க வைத்து , அதிமுக என்கிற அடிமாட்டுக்கு போக இருக்கிற ஒரு கட்சியை விலைக்கு வாங்கி... தன்னிடம் பணம் பெற்றவர்கள் ஆள்வதற்கு பதிலாக தானே ஆண்டால் என்ன?! என்கிற லட்சிய 😃 லாட்டரி நோக்கோடு தனது அரசியல் பயணத்தை வெகு கச்சிதமாக தொடங்கி இருக்கும் மார்ட்டின் ஒரு புத்திசாலி பிசினஸ்மேன் தான்.
பாவம் தமிழ்நாடு 🙃
#VijayTVK #ADMK #DMK #MartinFamily #TNPolitics
இவ்வாறு அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2026 சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம், அதிமுக மற்றும் புதுச்சேரியில் தனி கட்சி என மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வெவ்வேறு களங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இதனைச் சுட்டிக்காட்டி, சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஒரே குடும்பம்... மூன்று துருவங்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில், மார்ட்டின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு கட்சிகள் சார்பில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ளனர்.
ஆதவ் அர்ஜுனா (மார்ட்டினின் மருமகன்): விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்ட இவர், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 17,302 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
லீமா ரோஸ் (மார்ட்டினின் மனைவி): இவர் திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு, திமுக மற்றும் தவெக வேட்பாளர்களை வீழ்த்தி சுமார் 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியுள்ளார்.
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் (மார்ட்டினின் மகன்): புதுச்சேரியில் லட்சிய ஜனநாய கட்சி (LJK) என்ற புதிய கட்சியைத் தொடங்கி, காமராஜர் நகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
சமூக ஊடகங்களில் எழும் விமர்சனம்
இந்த வெற்றிகளைத் தொடர்ந்து, "மார்ட்டின் ஒரு புத்திசாலி பிசினஸ்மேன்" என விமர்சித்து ஒரு பதிவு வைரலாகி வருகிறது. அந்தப் பதிவின் சாராம்சத்தை தெரிந்து கொள்ளலாம்.
"விஜய்யின் தவெக-விற்கு ஆதவ் அர்ஜுனா மூலம் நிதியுதவி செய்து கட்சியைத் தன் பிடிக்குள் வைப்பது, சரிந்து வரும் அதிமுக-வை லீமா ரோஸ் மூலம் கைப்பற்றுவது, புதுச்சேரியில் மகன் சார்லஸ் மூலம் ஆட்சியைப் பிடிப்பது என மார்ட்டின் குடும்பம் ஒரு கச்சிதமான அரசியல் பயணத்தைத் தொடங்கியுள்ளது. தன்னிடம் பணம் பெற்றவர்கள் ஆள்வதற்குப் பதிலாக, தானே ஆள வேண்டும் என்கிற லட்சியத்துடன் இந்த அரசியல் காய்நகர்த்தல்கள் நடக்கின்றன."
தமிழக அரசியலில் இது போன்ற ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு முக்கியக் கட்சிகளில் முக்கியப் பொறுப்புகளில் இருப்பது இதுவரை கண்டிராத ஒன்று என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 'லாட்டரி கிங்' என அழைக்கப்படும் சாண்டியாகோ மார்ட்டின் குடும்பத்தின் இந்த 'ஆல் இன் ஒன்' அரசியல் வெற்றி, வரும் நாட்களில் தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பேசுபொருளாகியுள்ளது.












Click it and Unblock the Notifications