"இப்போ ஏன்டா வாய கடிச்ச".. பெண்களை துரத்தி துரத்தி "முத்தம்".. பீகாரை அலறவிடும் "சீரியல் கிஸ்ஸர்"
எந்த பெண்களை கண்டாலும் விடாமல் துரத்திச் சென்று 'லிப் டூ லிப்' முத்தம் கொடுத்து பீகாரையே அலற வைத்து வருகிறான் ஒரு "சீரியல் கிஸ்ஸர்".
பாட்னா: "எனக்குன்னே வருவீங்களாடா.." என வடிவேலு கேட்பது போல தான், தற்போது பீகார் பெண்களின் மைண்ட் வாய்ஸ் உள்ளது. அந்த அளவுக்கு அவர்களை வறுத்தெடுத்து வருகிறான் ஒரு "முத்த சைக்கோ".
பீகார் முழுவதும் புயலாகச் சுற்றி வரும் இந்த விசித்திர சைக்கோ, கண்ணில் தென்படும் பெண்களை எல்லாம் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறான்.
கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக, இதே வேலையாகச் சுற்றி வரும் இவன், நேற்றுதான் சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளான். தற்போது அந்த வீடியோதான் சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இவனுக்குப் பயந்தே பல பெண்கள் தற்போது வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கிக் கிடப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அலறவிடும் "சீரியல் கிஸ்ஸர்"
பீகாரில் நடைபெற்று வரும் ஒரு சம்பவம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. பெண்களைக் குறிவைத்து கொலை செய்யும் சீரியல் கில்லர்களை பார்த்திருப்போம். ஆனால், எந்த பெண்களைக் கண்டாலும் விடாமல் துரத்திச் சென்று 'லிப் டூ லிப்' முத்தம் கொடுத்து பீகாரையே அலற வைத்து வருகிறான் ஒரு "சீரியல் கிஸ்ஸர்". கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாகப் பீகாரின் பல்வேறு பகுதிகளில் இந்த முத்த சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

பல பெண்களிடம் லீலை
ஆனால், முதலில் யாரும் இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கவில்லை. வெளியே தெரிந்தால் அவமானமாகிவிடும் என நினைத்துப் பல பெண்கள் இது தொடர்பாக யாரிடமும் கூறாமல் இருந்து வந்திருக்கின்றனர். பின்னர், ஏதோ ஒரு பெண், இதுகுறித்து தனது தோழிகளிடம் கூற, அவர்கள் "உனக்குமா.." என கோரஸாக கேட்டுள்ளனர். அப்போதுதான், பல பெண்கள் இந்த முத்த சைக்கோவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

நடுத்தர வயது பெண்கள்தான் டார்கெட்
இதையடுத்து, இந்த விஷயம் குறித்து தங்கள் கணவர் அல்லது சகோதரர்களிடம் பெண்கள் கூற பீகார் முழுவதும் இந்த விஷயம் தீயாகப் பரவியுள்ளது. இதன்பேரில், கைரா, சிகந்த்ரா, ஜாமுய், அலிகஞ்ச் உள்ளிட்ட மாவட்டங்களில் பல பெண்கள் இதுகுறித்து காவல் நிலையங்களில் புகார் அளித்தனர். அப்போது நடுத்தர வயது பெண்கள் தான் இவனது டார்கெட்டாக இருப்பதை போலீஸார் கண்டறிந்தனர். ஆனால், அந்த சைக்கோ ஓரிடத்தில் இல்லாமல் இடம்பெயர்ந்து கொண்டே இருப்பதால் அவனைப் பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.

கதற கதற முத்தம்
இந்நிலையில், ஜாமுய் மாவட்டத்தில் உள்ள சதார் மருத்துவமனைக்கு வெளியே நின்று கொண்டு நடுத்தர வயதிலான பெண் ஒருவர், செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பெண்ணுக்குப் பின்னால் வந்த ஒருவன், திடீரென அவரை கட்டிப்பிடித்து உதட்டோடு உதடு முத்தம் கொடுத்தான். அந்தப் பெண் எவ்வளவு முயன்று பார்த்தும் அவனது பிடியில் இருந்து வெளிவர முடியவில்லை. சுமார் 20 நொடிகளுக்கு மேலாக அப்பெண்ணுக்கு முத்தம் கொடுத்த அவன், பின்னர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

போலீஸ் வலை
அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், அந்த மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, அந்த சீரியல் கிஸ்ஸரை போலீஸார் அடையாளம் கண்டனர். இதையடுத்து, அவனது புகைப்படத்தை வைத்து போலீஸார் அவனைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், ஜாமுய் மாவட்டத்தில் இருந்து அவன் வெளியேற முடியாத அளவுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications