காதலுக்காக கணவன் கொலை: 55 வயது மாமனுடன் வாழ! கொடூர முடிவெடுத்த புதுமணப்பெண் - பீகாரில் பயங்கரம்!

Subscribe to Oneindia Tamil

பாட்னா: 55 வயது மாமாவை திருமணம் செய்து கொள்வதற்காக திருமணமான 45 நாட்களிலேயே தனது கணவரை பெண் ஒருவர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் பீகாரில் நடந்தது. மேகாலயாவில் நடந்தது போல் பீகாரிலும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

பீகார் மாநிலம், ஔரங்காபாத்தில் 32 வயதான பிரியன்சு என்பவர் கடந்த மாதம் 24 ஆம் தேதி மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

crime bihar marriage

இது தொடர்பான விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கொலையில் பிரியன்சுவின் மனைவி குஞ்சா சிங்கிற்கு (30) சம்மந்தம் இருப்பது தெரியவந்தது. குஞ்சா சிங்கிற்கும் அவரது கணவர் பிரியன்சுக்கும் இடையே திருமணமாகி 45 நாட்கள்தான் ஆகின்றன.

இதுகுறித்து ஔரங்கபாத் போலீஸ் எஸ்பி அம்பரீஷ் கூறியிருப்பதாவது: குஞ்சா சிங் மீது சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரணை நடத்தினோம். இந்த நிலையில் குஞ்சா சிங்கிற்கு கடந்த 15 ஆண்டுகளாக தனது அத்தையின் கணவர் ஜீவன் என்பவருடன் ரகசிய தொடர்பு இருந்ததாம்.

இதனால் வேறு யாரையும் திருமணம் செய்ய அவர் மறுத்து வந்தார். பெற்றோரும், ஏதோ வயது கோளாறில் திருமணம் செய்ய மறுக்கிறார் என நினைத்து விட்டு வைத்தனர். ஆனால் அவருக்கும் அத்தை கணவருக்கும் இடையே உறவு இருப்பது தெரியவந்ததும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் , குஞ்சா தேவிக்கு திருமணம் செய்ய முயன்றனர்.

இந்த நிலையில் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியால் பிரியன்சுவை, குஞ்சா சிங் திருமணம் செய்து கொண்டார். ஆனாலும் தொடர்ந்து ஜீவனுடன் தொடர்பில் இருந்தாராம். எத்தனை நாட்கள்தான் இப்படியே திருட்டுத்தனமாக உறவை வளர்ப்பது என எண்ணிய குஞ்சா சிங், புதுமாப்பிள்ளை பிரியன்சுவை தீர்த்து கட்ட திட்டம் போட்டார்.

இதற்காக தனது மாமாவிடமே கூலிப்படையை ஏற்பாடு செய்யுமாறு கூறியிருந்தார். இந்த நிலையில் கொலை நடந்த நாளான கடந்த மாதம் 25 ஆம் தேதி தனது தங்கை வீட்டுக்குச் சென்றுவிட்டு ரயிலில் பயணித்த பிரியன்சு, நவிநகர் ரயில் நிலையத்திற்கு வந்தார். அப்போது தனது மனைவிக்கு போன் செய்து, தன்னை வீட்டிற்கு அழைத்து வர பைக்கில் யாரையாவது அனுப்பும்படி கேட்டாராம்.

உடனே குஞ்சா சிங், அதை கொலையாளிகளுக்கு தெரிவித்தார். கொலையாளிகள் சமயம் பார்த்து காத்திருந்த போது, பிரியன்சு அவருடைய கிராமத்திற்கு வந்ததும் அவரை இருவர் வழிமறித்து சுட்டுக் கொலை செய்தனர். குஞ்சா சிங்கின் மொபைல் விவரங்கள் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் அவர் தனது கணவரை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து இந்த கொலை வழக்கில் ஜெய்சங்கர், முகோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கொலைக்கு கூலிப்படையை ஏவிய ஜீவன் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். இதுவரை 3 பேரை கைது செய்துள்ளோம். இவ்வாறு எஸ்பி தெரிவித்துள்ளார்.

இந்தூர் நகரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி என்பவருக்கும், சோனம் ரகுவன்ஷி என்பவருக்கும் மே மாதம் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்குப் பிறகு, அவர்கள் தேனிலவுக்காக மேகாலயாவில் உள்ள சோஹ்ரா (Cherrapunji) பகுதிக்குச் சென்றுள்ளனர்.மே 23 அன்று ராஜா ரகுவன்ஷி காணாமல் போனார். 10 நாட்களுக்குப் பிறகு, ஜூன் 2 அன்று சோஹ்ராவுக்கு அருகிலுள்ள ஒரு ஆழமான பள்ளத்தாக்கில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் கள்ளக்காதலுக்காக சோனமே கூலிப்படையை ஏவி தனது கணவரை கொன்றது தெரியவந்தது. மேலும் கணவரை கொலை செய்ய 3 முறை முயற்சித்தும் முடியவில்லை. இதற்காக அவரை ஹனிமூனுக்கு அழைத்துச் செல்வதாக டிக்கெட் போட்டு இது போன்ற கொடூரத்தை அந்த பெண் அரங்கேற்றியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+