பீகார் ரயில் விபத்து: உதவி எண்களை அறிவித்தது ரயில்வே.. சம்பவ இடத்திற்கு விரைந்த மத்திய அமைச்சர்!
பாட்னா: பீகார் மாநிலம் ரகுநாத்பூர் ரயில் நிலையம் அருகே பயணிகள் ரயில் தடம்புரண்டு விபத்துக்கு உள்ளான நிலையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள ரகுநாத்பூர் ரயில் நிலையத்தில் இன்று இரவு (அக்டோபர் 11) வடகிழக்கு சூப்பர் பாஸ்ட் ரயிலின் ஐந்து பெட்டிகள் தடம் புரண்டன. ஆனந்த் விஹார் டெர்மினலில் இருந்து அசாம் மாநிலம் காமாக்யா நோக்கிச் செல்லும் ரயில் எண் 12506 நார்த் ஈஸ்ட் எக்ஸ்பிரஸின் சில பெட்டிகள் இரவு 9.35 மணியளவில் டானாபூர் பிரிவின் ரகுநாத்பூர் ஸ்டேஷன் அருகே தடம் புரண்டன.

இந்த விபத்து தொடர்பாக அவசரத் தொடர்புக்கு வடக்கு ரயில்வே ஹெல்ப்லைன் எண்களைப் பகிர்ந்துள்ளது. ஹெல்ப்லைன் எண்கள்: PNBE - 97714 49971, DNR - 89056 97493, ARA - 83061 82542, COML CNL - 77590 70004 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், ரயில் தடம்புரண்ட விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு விரைவில் அனுப்புமாறும் பக்சர் மற்றும் அர்ரா உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்படி, மாவட்டத்தின் முக்கிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
மருத்துவக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். ரயில்வே போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீட்புப் படையினருடன் பொதுமக்களும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். போதுமான வெளிச்சம் இல்லாததால், மீட்புப் பணிகளில் சிக்கல் உள்ளது.
செல்போன் ஃப்ளாஷ் லைட் மற்றும் டார்ச் வெளிச்சத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், விளக்குகளை அமைக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்லது.
இந்த விபத்து பற்றி பேசியுள்ள, மத்திய அமைச்சர் அஷ்வினி சௌபே, மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) துணை ஜெனரல் மற்றும் பிற அதிகாரிகளுடன் பேசினேன். எங்கள் தொண்டர்களிடமும் நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன், அவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவ குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன. மீட்பு பணி நடந்து வருகிறது. நானும் ரகுநாத்பூர், பக்சர் செல்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications