கவுன்சிலரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய காதலி.. கருக்கலைப்பு + 8 முறை திருமணத்துக்கு மறுத்ததால் கோபம்
பாட்னா: பீகாரில் காதலித்து 8 முறை தேதி குறித்தும் கடைசி நேரத்தில் திருமணத்துக்கு மறுத்து வந்த காதலரான கவுன்சிலரின் அந்தரங்க உறுப்பை அவரது காதலி கத்தியால் வெட்டி டாய்லெட்டில் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் சரண் மாவட்டம் மதாரா பகுதியில் நர்சிங் ஹோம் நடத்தி வருபவர் 28 வயது இளம்பெண். அதேபகுதியில் வார்டு கவுன்சிலராக இருப்பவர் வேத்பிரகாஷ் (வயது 30). இவர்கள் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் அவர்களை நண்பர்களாக்கியது. அடிக்கடி இருவரும் செல்போனில் பேசியதோடு, நேரிலும் சந்தித்து வந்தனர்.
இந்த நெருக்கம் அவர்கள் இடையே காதலாக மாறியுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த வேளையில் வேத்பிரகாஷ் அவரை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். மேலும் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதனால் அந்த பெண் கர்ப்பமாகி உள்ளார். இதுபற்றி அந்த பெண் வேத் பிரகாஷிடம் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த வேத் பிரகாஷ், ‛‛நாம் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம். கர்ப்பிணியாக உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. இதனால் கர்ப்பத்தை கலைத்துவிடுவோம்'' எனக்கூறியுள்ளார். ஆனால் அவர் மறுத்துள்ளார்.
இருப்பினும் வேத்பிரகாஷ் தொடர்ந்து வலியுறுத்தியதால் 2 முறை இளம்பெண் தனது கர்ப்பத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே அந்த இளம்பெண், வேத் பிரகாஷிடம் திருமணம் செய்து கொள்ளும்படி வலியுறுத்தி வந்துள்ளார். ஆனால் வேத் பிரகாஷ் குறிப்பிட்ட தேதியை சொல்லி அந்த நாளில் பதிவு திருமணம் செய்து கொள்வதாக தெரிவித்து வந்துள்ளதோடு, கடைசி நேரத்தில் ரிஜிஸ்டர் அலுவலகம் செல்லாமல் இருந்துள்ளார். அதன்பிறகு ஏதாவது ஒரு காரணத்தை கூறி இளம்பெண்ணை சமாளித்து வந்துள்ளார்.
இதற்கிடையே தான் கடந்த 1ம் தேதி சப்ராவில் உள்ள நீதிமன்றத்தில் வைத்து திருமணம் செய்து கொள்வதாக வேத் பிரகாஷ் கூறியுள்ளார். இதையடுத்து மகிழ்ச்சியடைந்த அந்த இளம்பெண் கையில் மெஹந்தி போட்டு திருமணத்துக்கு தயாராகி உள்ளார். ஆனால் வழக்கம்போல் வேத் பிரகாஷ் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை. இதனால் இளம்பெண் கடும் கோபமடைந்தார். மேலும் வேத் பிரகாஷ் தன்னை ஏமாற்றுவதாக அவர் நினைத்தார்.
இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், நீதிமன்றத்தில் இருந்து தனது நர்சிங் ஹோமிற்கு திரும்பி உள்ளார். அதன்பிறகு அன்றைய தினம் வேத் பிரகாசை அவர் தொடர்பு கொண்டு நர்சிங் ஹோமிற்கு அழைத்துள்ளார். அங்கு வேத் பிரகாஷ் சென்ற நிலையில் திருமணத்துக்கு ஏன் வரவில்லை? என கேள்வி கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது திருமணம் செய்ய வேத் பிரகாஷ் மறுத்துள்ளார்.
இதனால் கோபமடைந்த பெண் கத்தியை எடுத்து வேத் பிரகாஷின் அந்தரங்க உறுப்பை வெட்டி டாய்லெட்டில் போட்டுள்ளார். இதனால் வேத்பிரகாஷ் வலி தாங்க முடியாமல் அலறி துடித்துள்ளார். இதையடுத்து அவர் மீட்கப்பட்டு பாட்னா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போதும் அவரது உடல்நிலை சீரியஸாக உள்ளது.
மேலும் சம்பவம் குறித்து வேத் பிரகாஷ் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரை தொடர்ந்து போலீசார் பெண்ணை கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி சரண் மாவட்ட எஸ்பி குமார் ஆஷிஷ் கூறுகையில், ‛‛கைது செய்யப்பட்டுள்ள பெண் திருமணம் செய்து கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால் 7 முதல் 8 முறை திருமண தேதி குறித்தும் ஏதாவது காரணத்தை கூறி அந்த நபர் (வேத்பிரகாஷ்) திருமணத்தை நிறுத்தி உள்ளார். இதனால் அவருடைய அந்தரங்க உறுப்பை வெட்டியுள்ளார்'' என்று கூறியுள்ளார். இந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications