‛‛எழுதி கூட தரேன்’’.. பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஓராண்டு கூட நிலைக்காது.. பிரசாந்த் கிஷோர் குண்டு
பாட்னா: ‛‛பீகாரில் புதிதாக அமைந்துள்ள பாஜக-ஜேடியூ கூட்டணி ஓராண்டு கூட நிலைக்காது. இதனை நான் எழுதி கூட தருகிறேன்'' என தேர்தல் வியூக வகுப்பாளரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தன.

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இருந்த நிலையில் துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் இருந்தார். இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் அந்த கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளார்.
தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். இன்று காலையில் நிதிஷ் குமார் பீகார் ஆளுநரிடம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் வழங்கினார். மேலும் பாஜக ஆதரவுடன் புதிதாக ஆட்சியமைக்கவும் உரிமை கோரினார். இதன்மூலம் பீகாரில் நடந்து வந்த ஜேடியூ, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
இன்று மாலையில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக உள்ளார். அவருடன் 8 பேர் பதவியேற்க உள்ளனர். இதில் 2 பேர் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளனர். பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர். 6 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தான் பீகாரில் நடந்த அரசியல் மாற்றம் குறித்து தேர்தல் வியூக வகுப்பாளரும், பீகாரை சேர்ந்தவருமான பிரசாந்த் கிஷோர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பீகாரில் புதிதாக மீண்டும் பாஜக-ஜேடியூ கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி என்பது 2025ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தல் வரை நீடிக்காது. அதாவது ஓராண்டு அல்லது அதற்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிடும். தற்போது நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியின் முககமாக அறியப்படுகிறார். மேலும் பாஜகவின் ஆதரவு பெற்ற தலைவராக இருக்கிறார். இருப்பினும் இந்த கூட்டணி என்பது நிலைக்காது. இதனை நான் எழுதி தருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications