பீகாரில் பாஜக-ஜேடியூ அரசு எந்த நேரத்திலும் கவிழும்... ஆர்.ஜே.டி. தேஜஸ்வி யாதவ் கணிப்பால் பரபரப்பு
பாட்னா: பீகாரில் ஆளும் பா.ஜ.க.-ஜேடியூ அரசு எந்த நேரத்தில் கவிழ்ந்துவிடும்; அதனால் ஆர்ஜேடியினர் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகுங்கள் என அக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருப்பது பீகார் அரசியலில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களைப் பெற்ற போதும் ஜேடியூவின் நிதிஷ்குமார் முதல்வராக தொடர்ந்து வருகிறார். பீகாரில் பாஜக கூட்டணியில் ஜேடியூ இடம்பெற்றிருக்கிறது என்பதை பற்றி கவலைப்படாமல் அருணாச்சல பிரதேசத்தில் ஜேடியூவின் 6 எம்.எல்.ஏக்களை வளைத்தது பாஜக.

கூட்டணியில் அதிருப்தி?
இதனால் பாஜக மீது ஒருவிதமான அதிருப்தியுடன்தான் இருக்கிற்து ஜேடியூ. மேலும் பாஜகவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றாக வி.ஐ.பி. கட்சி பாஜக மீதான அதிருப்தியை காட்டும் வகையில் உ.பி. தேர்தலில் போட்டியிடுவோம்; கூட்டணி குறித்து பின்னர் முடிவு செய்வோம் என அறிவித்துள்ளது.

எந்த நேரத்திலும் போர்க்கொடி?
தற்போதைய நிலையில் பீகார் சட்டசபையில், பாஜக தலைமையிலான கூட்டணிக்கு 125 எம்.எல்.ஏக்களும் ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணிக்கு 110 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். பாஜகவின் கூட்டணி கட்சிகளான அதிருப்தியில் உள்ள வி.ஐ.பி, ஹிந்துஸ்தான் ஆவாம் கட்சிக்கு மொத்தம் 8 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கலாம் என்கிற நிலையும் இருக்கிறது.

ஆட்சி கவிழலாம் என கணிப்பு
இந்த சூழலில்தான் தமது கட்சியினருக்கு தேஜஸ்வி யாதவ் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் அடுத்த சில மாதங்களில் பீகார் அரசியலி எதுவும் நிகழக் கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன. அதனால் ஆர்ஜேடி நிர்வாகிகள் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

ஆர்ஜேடிக்கு எதிர்ப்பு
ஆனால் ஆர்ஜேடி கட்சி நிர்வாகிகள், கட்சி தாவாமல் இருக்கத்தான் இப்படியான ஒரு தகவலை தேஜ்ஸ்வி பரப்பி வருகிறார். பாஜக-ஜேடியூ கூட்டணி அரசு ஒருபோதும் கவிழாது என்று இரு கட்சித் தலைவர்களும் திட்டவட்டமாக கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications