தேசிய கீதம் தெரியாமல்.. திணறி விழித்த பாஜக "மாஜி" அமைச்சர்.. அதிர்ச்சியில் பீகார்.. வைரலாகும் வீடியோ
தேசிய கீதம் தெரியாமல் பாஜக அமைச்சர் விழித்துள்ளார்
பாட்னா: தேசிய கீதம் தெரியாமல், தப்பு தப்பாய் பாடி, திணறி விழித்துள்ளார் ஒரு பாஜகவின் முன்னாள் அமைச்சர் ஒருவர்.. அதுவும் கல்வி அமைச்சராக இருந்தவர்.. இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
பீகாரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது.. இதையடுத்து நிதிஷ்குமார் மறுபடியும் அங்கு முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

அவருடைய அமைச்சரவையில், கல்வி அமைச்சராக மேவாலால் சவுத்ரியை நியமித்திருந்தனர். மேவாலால் சவுத்ரி மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில் அவர் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் கிளம்பி வந்தன.
இந்நிலையில் அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சி ஒன்றின் வீடியோவை ராஷ்ட்ரிய ஜனதா தளம் வெளியிட்டது. அதில், நிகழ்ச்சியில் தேசிய கீதம் ஒலிக்கிறது.. உடனே அனைவருமே தேசிய கீதம் பாட தொடங்குகிறார்கள்.. சவுத்ரியும் பாட ஆரம்பிக்கிறார்.. ஆனால், அவருக்கு அடுத்தடுத்த வரிகள் தெரியவில்லை.. அதனால், வார்த்தைகளை மென்று மென்று விழுங்கினார்.
அடுத்த வரிகள் தெரியாமல் திணறியும் விழிக்கிறார். ஆனால், அந்த வீடியோவில் மற்ற குழந்தைகள் எல்லாரும் தேசிய கீதம் பாடுகிறார்கள்.. இறுதியில் கடைசி வரியை இணைத்து தேசிய கீதத்தை முடிக்கிறார்... "பாரத் மாதா கி ஜெய்" மற்றும் "வந்தே" என்றும் சொல்கிறார்.
भ्रष्टाचार के अनेक मामलों के आरोपी बिहार के शिक्षा मंत्री मेवालाल चौधरी को राष्ट्रगान भी नहीं आता।
— Rashtriya Janata Dal (@RJDforIndia) November 18, 2020
नीतीश कुमार जी शर्म बची है क्या? अंतरात्मा कहाँ डुबा दी? pic.twitter.com/vHYZ8oRUVZ
இந்த வீடியோவை வெளியிட்டுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம், உங்கள் மனசாட்சியை எங்கே மூழ்கடித்தீர்கள்? என்று நிதிஷூக்கு கேள்வி எழுப்பியது.. அதுமட்டுமல்ல, இந்த சம்பவம் பொதுமக்களிடையேயும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மூச்சுக்கு முன்னூறு தடவை தேச பக்தியை பற்றி பேசிவரும் பாஜகவில் இப்படி ஒரு பிரமுகரா? அதுவும் கல்வி அமைச்சருக்கு தேசிய கீதம் தெரியாமல் இருக்கலாமா? என்ற முணுமுணுப்புகளும் எழுந்து வந்தன. இந்நிலையில், ஏற்கனவே பல புகார்கள் சவுத்ரி மேல் அடுத்தடுத்த வந்தநிலையில், இப்போது தேசிய கீதம் வீடியோவும் வெளியாகி சர்ச்சையை கிளப்பிவிட்டதால், மேவலால் சவுத்ரி தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்











Click it and Unblock the Notifications