பீகாரில் இறுதியானது தொகுதி பங்கீடு.. பாஜகவுக்கு 17 இடம், நிதிஷ்குமாருக்கு 16 சீட் ஒதுக்கீடு

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் என்டிஏ கூட்டணியில் ஒரு வழியாக இப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அங்கே பாஜக அதிகபட்சமாக 16 இடங்களில் போட்டியிடுகிறது.

நமது நாட்டில் விரைவில் லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், இது குறித்த அறிவிப்பைத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. மொத்தம் 7 கட்டமாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது,

BJP To Contest 17 Seats JDU 16 Chirag Paswan s Party 5 In Bihar

இந்த முறை லோக்சபா தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் நேரடி போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிப் பங்கீட்டை பாஜக இறுதி செய்து வருகிறது.

இதற்கிடையே பீகாரில் என்டிஏ கூட்டணி தனது தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்துள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்தில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் இருக்கும் நிலையில், பாஜக அதிகபட்சமாக 17 இடங்களில் போட்டியிடுகிறது. இது பீகாரில் யார் பெரிய கட்சி என்பதை உணர்த்துவதாகவே இருக்கிறது.

பாஜகவை விட ஒரு இடம் குறைவாக அதாவது 16 தொகுதிகளில் நிதிஷ்குமாரின் ஜேடிஎஸ் கட்சி போட்டியிடுகிறது. இதுபோக சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி ஐந்து இடங்களிலும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா மற்றும் உபேந்திர குஷ்வாஹாவின் ஆர்எல்எம் தலா ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+