தள்ளிவிட்ட குரங்கு.. மாடியில் இருந்து விழுந்த மாணவிக்கு நேர்ந்த கதி.. இப்படியெல்லாமா இறப்பு வரும்?
பாட்னா: பீகாரில் வீட்டு மாடியில் அமர்ந்து படித்து கொண்டிருந்த 10ம் வகுப்பு மாணவியை குரங்கு கீழே தள்ளிவிட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மனிதராக பிறந்த நாம் அனைவரும் என்றாவது ஒருநாள் இந்த பூமியை விட்டு செல்லத்தான் போகிறோம். இதனால் தான் வாழும்போது இறப்பை பற்றி கவலைப்படாமல் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.

ஆனாலும் கூட இளம்வயது மரணம் உள்பட சிலரது இறப்புகள் என்பது நம்மால் தாங்க முடியாது என்பதோடு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கும். அப்படித்தான் ஒரு சம்பவம் பீகாரில் நடந்துள்ளது.
மனிதனாக பிறந்தால் இப்படியெல்லாமா ஒருவருக்கு இறப்பு நேரிடும்? என்ற கேள்வியை எழுப்பும் வகையில் அந்த சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய சோகமான தகவல் வருமாறு: பீகார் மாநிலம் சிவான் மாவட்டம் பக்வான்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட மஹார் கிராமத்தை சேர்ந்தவர் பிரியா குமார். இவருக்கு 15 வயது ஆனது. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிரியா குமார் 10ம் வகுப்பு படித்து வந்தார்.
தற்போது அவரது கிராமத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பிரியா குமார் தினமும் காலையில் சூரியன் உதயமான பிறகு குளிர்காயும் வகையில் வீட்டு மொட்டை மாடியில் அமர்ந்து பாடம் படித்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று குரங்கு கூட்டம் வந்தது. இதில் பயந்து எஸ்கேப்பாக முயன்ற பிரியா குமாரை குரங்கு ஒன்று மாடியில் இருந்து கீழே தள்ளியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரியா குமார் இறந்தார்.
இதுபற்றி அந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‛‛பிரியா குமார் தனது வீட்டு மாடியில் அமர்ந்து பாடம் படித்து கொண்டிருந்தார். அப்போது குரங்கு கூட்டம் வந்தது. குரங்கை பார்த்ததும் பயந்த பிரியா குமார் படிக்கட்டு வழியாக மாடியில் இருந்து கீழே இறங்க முயன்றார்.
அப்போது ஒரு குரங்கு அவர் மீது பாய்ந்து ஆக்ரோஷமாக தள்ளியது. இதில் பிரியா குமார் கால் தவறி கீழே விழுந்தார். இதில் தலையின் பின்புறத்தில் காயம் ஏற்பட்டதோடு மயங்கினார். உடனடியாக குடும்பத்தினர் சிவான் சாதர் மருத்துவுமனைக்கு அவரை கொண்டு சென்றனர். ஆனாலும் பிரியா குமார் இறந்துவிட்டார். எங்கள் கிராமத்தில் அவ்வப்போது குரங்குகள் கூட்டமாக வந்து மக்களை அச்சுறுத்தும். இப்போது குரங்கு கூட்டத்தால் மாணவியின் உயிரை போய்விட்டது'' என்று கவலையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தை பக்வான்பூர் போலீஸ் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபிசர் சுஜித் குமார் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சம்பம் பற்றி கேள்விப்பட்டோம். அங்கு சென்று விசாரணை நடத்தினோம். மாணவியை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறியிருந்தனர். உடலில் ஏற்பட்ட காயத்தால் மாணவி இறந்துள்ளார். மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்ய குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதேபோல் போலீசிலும் யாருக்கும் எதிராக புகார் அளிக்கவில்லை'' என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications