பெண்களுக்கு ரூ.5000.. ஸ்டாலின் மாஸ்டர் பிளான்.. மோடி பிளானை முன்பே அறிந்து.. வேகமான மூவ்?
பாட்னா: தமிழ்நாட்டில் பெண்களுக்கான முக்கியமான ஒரு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.
பீகாரில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுவது, பீகார் பெண்களுக்கு வழங்கப்பட்ட ₹10,000 நிதியுதவித் திட்டம். இந்தத் திட்டம் பெண்களின் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பா.ஜ.க பக்கம் திருப்பியது.

மதுரை மாநாடும் மோடியின் திட்டமும்
பீகாரில் கிடைத்த இந்த வெற்றியின் பார்முலா தற்போது தமிழகத்திலும் எதிரொலிக்கப் போகிறது. பிரதமர் நரேந்திர மோடி, தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார். விரைவில் மதுரையில் நடைபெற உள்ள பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில், பீகாரைப் போலவே தமிழகப் பெண்களுக்கும் ₹10,000 வழங்கும் புதிய திட்டத்தைப் பிரதமர் அறிவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
இதன் மூலம் தமிழகப் பெண்களின் ஆதரவைப் பெற்று, பா.ஜ.க-வின் செல்வாக்கை மாநிலத்தில் நிலைநிறுத்துவதே பிரதமரின் நோக்கமாக உள்ளது.
ஸ்டாலினின் அதிரடி வியூகம்
மத்திய அரசின் இந்தத் திட்டத்தைப் பற்றிய ரகசியத் தகவல்கள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்குத் தெரியவந்தன. பா.ஜ.க-வின் இந்தத் திட்டத்தை எதிர்கொள்ள அவர் உடனே களத்தில் இறங்கி உள்ளார். மோடி மதுரையில் அறிவிப்பை வெளியிடும் முன்பே, தமிழக அரசின் சார்பில் ஒரு மாபெரும் அறிவிப்பை வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
ஸ்டாலினின் திட்டம்
₹5,000 சுயத்தொழில் திட்டம்: தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு தலா ₹5,000 வழங்கும் புதிய திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்கவுள்ளார். இது ஒரு கடன் உதவித் திட்டமாகவோ அல்லது சுயதொழில் தொடங்குவதற்கான மானியமாகவோ இருக்கலாம். அல்லது நேரடியாக வங்கிகளில் பணம் வழங்கும் திட்டமாகவோ இருக்கும். இதற்கான இறுதி வடிவம் விரைவில் முடிவெடுக்கப்படும்.
மகளிர் உரிமைத் தொகை உயர்வு: ஏற்கனவே தமிழகத்தில் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் மகளிர் உரிமைத் தொகை (₹1,000) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகையை மேலும் உயர்த்த முதல்வர் முடிவு செய்துள்ளார். இந்த தொகையை 1500 ஆக உயர்த்த வாய்ப்புகள் உள்ளன.
அரசியல் யுத்தம்
மதுரை மாநாட்டிற்கு முன்னதாகவே இந்த அறிவிப்புகளை வெளியிட்டு, பா.ஜ.க-வின் திட்டத்தை முறியடிக்க தி.மு.க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் ₹10,000 திட்டம் ஒருபுறம், மாநில அரசின் தொழில் கடன் மற்றும் உரிமைத் தொகை உயர்வு மறுபுறம் எனத் தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
திமுக இன்னும் திறக்க வேண்டிய "பண்டோரா பாக்ஸை" திறக்கவே இல்லை.. அதை திறந்ததும் எதிர்க்கட்சிகளுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் என்று திமுக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். அந்த நெருக்கடி வேறு எதுவும் இல்லை.. ஆளும் திமுகவின் தேர்தல் அறிக்கைதான் என்கிறார்கள்.
அதாவது 2026 தேர்தலுக்காக அவர்கள் கொடுக்க போகும் வாக்குறுதிகள் கண்டிப்பாக எடப்பாடி, விஜய் உள்ளிட்ட எதிர்க்கட்சி தரப்பை பெரிய அளவில் நெருக்கடிக்கு உள்ளாக்கும் என்று கூறப்படுகிறது.
1. பெண்களுக்கான புதிய திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.
2. முக்கியமான பல இலவச திட்டங்கள் இதன் மூலம் கொண்டு வரப்படும்.
3. இளைஞர்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகள் திட்டமிட்டு வரப்படுகிறது.
4. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026ஐ முன்னிட்டு பல புதிய நலத்திட்டங்களை ஆளும் திமுக தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தேர்தல் வாக்குறுதிகளும் வலிமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 தேர்தலுக்கு பின் மகளிர் உரிமை தொகை உயர்த்துவது, அரசு ஊழியர்களுக்கு நலத்திட்டங்கள், புதிய இலவசங்கள் என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட வாய்ப்புகள் உள்ளன.
புதிய செயலி அறிமுகம்
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கைக்காக பொதுமக்கள் (விவசாயிகள், வணிகர்கள், தொழில் அதிபர்கள் உட்பட) கருத்துக்களைப் பெற ஜனவரி 3, 2026 சனிக்கிழமை புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தினார்.
திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி தலைமையில் ஏற்கெனவே தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை கட்சித் தலைமை அலுவலகத்தில் சந்தித்த ஸ்டாலின், புதிய செயலி, வாட்ஸ்அப், சமூக வலைத்தளங்கள் வழியாக கருத்துகள், பரிந்துரைகளைச் சேகரிக்கும் இத்திட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார்.
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு மக்களிடம் கருத்து கேட்க இந்த செயலி அமைக்கப்படுகிறது. அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் கொண்ட குழு ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில், திமுக செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், திமுக வர்த்தகர் அணி துணைத் தலைவர் கோவி.செழியன், திமுக சொத்து பாதுகாப்புக் குழுச் செயலாளரும், தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சருமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், திமுக தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான டி.ஆர்.பி.ராஜா, திமுக அயலக அணிச் செயலாளர் எம்.எம்.அப்துல்லா முன்னாள் எம்.பி., திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், திமுக மருத்துவ அணிச் செயலாளர் எழிலன் நாகநாதன், திமுக சுற்றுச்சூழல் அணிச் செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி, திமுக மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஆ.தமிழரசி ரவிக்குமார் எம்.எல்.ஏ., இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஜி.சந்தானம், கனவு தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் சம்பந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
234/234 DMK seat sharing: தொகுதி பங்கீடு ஓவர்! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை தொகுதிகள்! லிஸ்ட்! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்!











Click it and Unblock the Notifications