பீகாரில் உஷார் நிலையில் காங்.- மேலிட தலைவர்கள் முகாம்- எம்.எல்.ஏக்களை பாதுகாக்க தீவிரம்
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் வாக்குகள் எண்ணும் நிலையில் வெற்றி பெறும் எம்.எல்.ஏக்களை பாதுகாப்பதில் காங்கிரஸ் உஷார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கோவா, கர்நாடகா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக வென்ற போதும் அலட்சியமாக இருந்ததால் பாஜக ஆட்சி அமைத்தது. இந்த முறை பீகாரில் அப்படி நிகழ்ந்துவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் படுஉஷாராக உள்ளது.

இதற்காக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ரந்தீப்சிங் சுர்ஜிவாலா, அவினாஷ் பாண்டேவை பாட்னாவுக்கு டெல்லி மேலிடம் அனுப்பி வைத்திருக்கிறது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் வெற்றி பெறும் வரை ஒவ்வொரு நிகழ்வுகளையும் உன்னிப்பாக கவனிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்ற உடனேயே பாட்னாவுக்கு அழைத்து வந்து ஒரே இடத்தில் தங்க வைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வெற்றி பெறும் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களிடம் பாஜக பேரம் எதுவும் பேசிவிடக் கூடாது என்பதற்காக அந்த கட்சி ஆளும் பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களுக்கு அவர்களை அனுப்பும் திட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ்.
பீகாரில் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என சில எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இருப்பினும் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள், தொங்கு சட்டசபைக்குதான் வாய்ப்பு என கணித்துள்ளன. இதனையடுத்தே இந்த உஷார் நடவடிக்கைகளை காங்கிரஸ் மேற்கொண்டு வருகிறது.
Recommended Video
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications