தலைமை தேர்தல் ஆணையருக்கும்.. மக்களுக்குமான போட்டியாம்! தோல்வியால் டோனை மாற்றிய காங்.
டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி என்டிஏ கூட்டணி முன்னிலையில் இருக்கிறது. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையரை காங்கிரஸ் விமர்சித்திருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகளை பொறுத்தவரை, ஞானேஷ் குமாருக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான நேரடி போட்டி என்று காங்கிரஸ் தலைவரில் ஒருவரான பவன் கேரா குற்றம்சாட்டியிருக்கிறார்.
"இது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கும் பீகார் மக்களுக்கும் இடையேயான போட்டி. நான் கூறியது போல, ஆரம்பக்கட்ட முடிவுகளை பொறுத்த அளவில், ஞானேஷ் குமார் பீகார் மக்களுக்கு எதிராக வெற்றி பெறுவது போல் தெரிகிறது. இந்தப் போராட்டம் பாஜக, காங்கிரஸ், ஆர்ஜேடி அல்லது ஜேடியு கட்சிகளுக்கு இடையேயானதல்ல. இது ஞானேஷ் குமாருக்கும் இந்திய மக்களுக்கும் இடையேயான நேரடிப் போராட்டம்.

இவை வெறும் ஆரம்பக்கட்ட முடிவுகள்தான். நாங்கள் சற்று காத்திருக்கிறோம். ஆரம்ப முடிவுகள் பீகார் மக்களுக்கு எதிராக கை ஓங்குவதாகவே காட்டுகிறது. பீகார் மக்களை நான் குறைத்து மதிப்பிட முடியாது. அவர்கள் தைரியத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எஸ்.ஐ.ஆர் இருந்தபோதிலும் அவர்கள் தைரியமாக வாக்களித்தார்கள். இப்போது, அடுத்த சில மணிநேரங்களில் ஞானேஷ்குமார் எவ்வளவு தாக்குப்பிடிப்பார் என்று பார்ப்போம்" என்று கூறியிருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கை 26-30 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. காலை 11 மணி நிலவரப்படி வாக்கு எண்ணிக்கை 10 சுற்று நிறைவடைந்திருக்கிறது. இதில் பாஜக 84 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 76 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது. மற்றபடி ராஷ்டிரிய ஜனதா தளம் 35, காங்கிரஸ் 6 தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்நிலையில் தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியிருக்கிறது. பீகாரில் ஆட்சி மாற்றத்திற்கான அலை வீசியதாகவும், பல இடங்களில் பாஜக தலைவர்கள் மக்களால் விரட்டியடிக்கப்பட்டபோதிலும், அவர்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மேலும் இது தேர்தல் ஆணையத்தின் "SIR வெற்றி" என்று விமர்சித்துள்ளார். அதேபோல மகாபந்தன் கூட்டணி முதல்வர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ் ஒரு ட்வீட் ஒன்றை போட்டுள்ளார். அதில், "இன்னும் இறுதிப் போராட்டம் மீதமிருக்கிறது தோழர்களே...!" என்று கூறியதோடு கையில் தடியுடன் கூடிய புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications