பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஒழுங்கா வேலை செய்ய மாட்டீங்களா.?" டெஷன்சனான உயர் அதிகாரி.. கம்பி எண்ணிய காவலர்கள்.. பரபர வீடியோ

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஒழுங்காக வேலை செய்யாத காவலர்களுக்கு உயர் அதிகாரி வினோத தண்டனை ஒன்று கொடுத்துள்ளார்.

பொதுமக்கள் அனைவரும் செல்லவே தயங்கும் இடங்களில் ஒன்று போலீஸ் நிலையம். காவலர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதே பொதுமக்களின் கவலையாக இருக்கும்.

பொதுமக்களின் புகார்களை போலீசார் முறையாக விசாரிப்பது இல்லை என்ற குற்றச்சாட்டும் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இந்தச் சூழலில் பீகாரில் காவலர்களுக்கு வினோத தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

வலுவடைகிறதா மூன்றாவது அணி? பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கேசிஆர் சந்திப்பு.. பின்னணி! வலுவடைகிறதா மூன்றாவது அணி? பீகார் முதல்வர் நிதீஷ் குமாருடன் கேசிஆர் சந்திப்பு.. பின்னணி!

பீகார்

பீகார்

பீகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் சூப்பிரண்டு ஒருவர், சரியாக வேலை செய்யாத ஐந்து காவலர்களை இரண்டு மணி நேரம் சிறையில் அடைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஐந்து காவலர்கள் லாக்கப்பிற்குள் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டே என்ன செய்வதென்று புரியாமல் அங்கும் இங்கும் நடப்பதைக் காணலாம்.

 சிறையில் அடைப்பு

சிறையில் அடைப்பு

சரியாக வேலை செய்யாத 3 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களை நவாடா எஸ்பி கவுரவ் மங்களா, கடந்த வியாழக்கிழமை இரவு இரண்டு மணி நேரம் லாக்கப்பில் வைத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் இது குறித்து நவாடா எஸ்பி கவுரவ் மங்களாவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, இதுபோல எந்தவொரு சம்பவமும் நடக்கவில்லை என்றும் இந்த போலி செய்தி என்றும் மறுத்துள்ளார்.

 விசாரணை

விசாரணை

அதேபோல மூத்த போலீசார் அதிகாரிகள் யாரும் இந்தச் சம்பவம் குறித்து வாய் திறக்கவில்லை. இந்தச் சம்பவம் இணையத்தில் பேசுபொருள் ஆன நிலையில், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனப் பீகார் போலீஸ் சங்கம் வலியுறுத்தி உள்ளது. "இந்தச் சம்பவம் குறித்து எங்களுக்கும் தெரிய வந்தது. இது போன்ற சம்பவங்கள் காலனித்துவ காலத்தை நினைவூட்டுகின்றன. இந்த சம்பவம் பீகார் போலீசாரை களங்கப்படுத்தக்கூடியது.

 வலியுறுத்தல்

வலியுறுத்தல்

இந்த விவகாரத்தில் உரிய விசாரணை தேவை. இந்த விவகாரத்தை மூடிமறைக்க அந்த எஸ்பி பார்க்கிறார். இதற்காகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அழுத்தும் கொடுக்கிறார்கள். சிசிடிவி காட்சிகளையும் சேதப்படுத்த முயன்றுள்ளனர். எனவே, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐபிசி சட்டப்படி தேவையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளார்.

English summary
Police jailed in Bihar for bad performance: Bihar SP allegedly put five subordinates inside a lockup.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X