நெருப்பாற்றில் நீந்திய விஜய்! குட் நியூஸ் சொன்ன கம்யூனிஸ்டுகள்! நேரில் போய் நன்றி சொல்கிறார் விஜய்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சி அமைய இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் நன்றி தெரிவிக்க கம்யூனிஸ்ட் கட்சிகளின் அலுவலகத்திற்கு விஜய் செல்வார் என தகவல்கள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக அறிவித்துள்ளது. இதனால் தவெகவின் பலம் 114 ஆக உயர்ந்துள்ளது.

vijay

அது போல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை தருவதாக தெரிவித்துள்ள நிலையில் தற்போது தவெகவின் பலம் 116 ஆக உயர்ந்துள்ளது.

பெரும்பான்மைக்கான ஆதரவை பெற வேண்டுமானால் இரு எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இது குறித்து இன்று மாலை கட்சி நிர்வாகிகளுடன் திருமாவளவன் ஆலோசனை நடத்துகிறார். இவரது முடிவை நாளை சொல்வார் என தெரிகிறது.

திமுக, அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க பார்க்கிறது. அப்படி அமைந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் திருமாவளவன் என பேசப்பட்டது.

இது தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது ஏதோ யூகத்தின் அடிப்படையில் பேசி வருகிறார்கள் என சொல்லப்பட்ட நிலையில் அதே கருத்தை தவெகவின் அருண்ராஜ் தெரிவித்திருந்தார்.

அது போல் புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியிருந்தார். மேலும் புதுவையில் இருந்து எம்எல்ஏக்கள் உடனே சென்னைக்கு வருமாறும் உத்தரவிட்டிருந்தார்.

அது போல் ஸ்டாலினும், தனது சட்ட வல்லுநர்களுடன் சில ஆலோசனைகளை நடத்தியிருந்தார். இதனால் அதிமுக- திமுக அரசு அமைகிறதோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அதிமுக- திமுக கூட்டணி அரசு அமையாது என டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.

இதனால் தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பாரா என்ற சந்தேகம் எழுந்தது. இந்த நிலையில் விஜய்க்கான பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. பதவியேற்பு விழா ஏற்பாடுகளும் நிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் நேற்று ஒரு முறை ஆளுநரை நேரில் சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது 118 இடங்களுடன் வந்தால் ஆட்சி அமைக்க அழைப்பதாக தெரிவித்துவிட்டார்.

தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகளிடம் ஆதரவு கோரி தவெக கடிதம் அனுப்பியிருந்தது. இது குறித்து இரு நாட்களாக உயர்மட்ட குழுக்கள் ஆலோசனை நடத்தியிருந்த நிலையில் விஜய்க்கு இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளன.

இதனால் தவெகவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பனையூர் கட்சி அலுவலகத்தில் தவெகவினர் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அது போல் விஜய்யின் பட்டினம்பாக்கம் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர், அக்கட்சியின் சட்டசபை எம்எல்ஏக்களின் குழுத் தலைவர் ராமசந்திரன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவிக்க விஜய் , கம்யூனிஸ்ட் அலுவலகத்திற்கு செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+