தமிழக மாஜி டிஜிபி தோல்வி.. பீகார் காங்., களமிறங்கியவருக்கு விழுந்த அடி.. 50,000 ஓட்டு வித்தியாசம்
பாட்னா: தமிழகத்தின் முன்னாள் டிஜிபியாக பிரிஜ் கிஷோர் துபே என்ற பிகே ரவி 2023ம் ஆண்டில் ஓய்வு பெறுவதற்கு முன்பாக விருப்ப ஓய்வு பெற்றார். பிறகு சொந்த மாநிலமான பீகாருக்கு சென்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். நடந்து முடிந்த பீகார் சட்டசபை தேர்தலில் அவர் போட்டியிட்ட நிலையில் 50,522 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
அரசியல்.. சாமானியன் முதல் படித்து உயர்பதவிகளில் இருப்பவர்கள் வரை அனைவரையும் களத்தில் இறக்கிவிடுகிறது. டாக்டர், ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்பட பல உயர்பதவிகளில் இருப்பவர்களும் அரசியல் கட்சிகளில் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். இதில் ஒரு சிலர் அரசியலில் வெற்றி பெறுகின்றனர். ஆனால் பெரும்பாலானவர்கள் தோல்வியை சந்திக்கின்றனர்.

இதற்கு உதாரணமாக கூற வேண்டும் என்றால் கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றிய அண்ணாமலை விருப்ப ஓய்வு பெற்று பணியை ராஜினாமா செய்தார். தமிழகத்தில் பாஜகவில் இணைந்து நாடாளுமன்ற மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் பாஜக மாநில தலைவர் பதவியை எட்டிப்பிடித்தார். தற்போது அதுவும் அவர் வசம் இல்லை.
அதேபோல் கர்நாடகாவில் ஐஏஎஸ் அதிகாரியாக இருந்த சசிகாந்த் செந்தில் ராஜினாமா செய்து காங்கிரஸில் இணைந்தார். தற்போது அவர் எம்பியாக உள்ளார். இதனால் அரசியல் என்பது எல்லோருக்கும் எளிதில் வெற்றியை கொடுத்து விடாது. அந்த வகையில் தான்
தமிழகத்தின் முன்னாள் டிஜிபி தனது ஓய்வுக்கு 3 மாதம் இருந்தபோது விருப்ப ஓய்வு பெற்று காங்கிரஸில் இணைந்தார்
அவரது பெயர் பிரிஜ் கிஷோர் ரவி என்ற பிகே ரவி. இவர் தமிழக தீயணைப்பு துறையில் டிஜிபியாக இருந்தார். கடந்த, 1989ம் ஆண்டு தமிழக கேடரை சேர்ந்த இவர் பல்வேறு பொறுப்புகளில் வகித்து டிஜிபி வரை உயர்ந்தார். இவர் பீகாரை சேர்ந்தவர். 33 ஆண்டுகள் ஐபிஎஸ்ஸாக பணியாற்றிய பிகே ரவி 2023ல் ஓய்வுக்கு 3 மாதம் இருந்தபோது பணி ஓய்வு பெற்றார். அதன்பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
பிகே ரவி பீகாரில் உள்ள ரோசெரா சட்டசபை தொகுதியில் போட்டியிட்டார். எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதற்காக தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். ஆனால் நேற்றைய ஓட்டு எண்ணிக்கையில் தோல்வியடைந்தார். இந்த தொகுதியில் பிகே ரவியை எதிர்த்து பாஜகவின் பிரேந்திர குமார் போட்டியிட்டார். அவர் மொத்தம் 1 லட்சத்து 22 ஆயிரத்து 773 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
காங்கிரஸ் கட்சியின் பிகே ரவி மொத்தம் 72,240 ஓட்டுகள் மட்டுமே பெற்று 2ம் இடம் பிடித்தார். இதனால் பிகே ரவி, பாஜக வேட்பாளர் பிரேந்திர குமாரிடம் சுமார் 50,522 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தற்போது தோல்வியடைந்த பிகே ரவி பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை துல் மோகன் ராம் ஏற்கனவே பீகாரில் இருந்து காங்கிரஸ் சார்பில் 3 முறை எம்பியாகவும், ஒருமுறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். ஆனால் அவரது மகன் பிகே ரவிக்கு பீகார் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications