Bihar’s Hidden Legacy பீகார்: நேற்று, இன்று, நாளை.. செழித்து வளர்ந்த சமணம்! மாற்று மதமாய் உருவெடுத்தது இப்படித்தான்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே அம்மாநிலம் கவனம் பெற்றிருக்கிறது. அரசியலை தாண்டி, பீகாரின் வரலாறு உள்ளிட்ட விஷயங்களை 'ஒன் இந்தியா தமிழ்' தொகுத்து வழங்கி வருகிறது. இந்த தொகுப்பில் இதற்கு முன்னர் பீகாரில் மன்னராட்சி பற்றி பேசியிருந்தோம். இன்று சமண மதத்தின் தொடக்கம், வளர்ச்சி பற்றியும் பார்ப்போம்.

வடமாநிலங்களில் வேத மதத்தின் ஆதிக்கம் இருந்தது. பீகாரும் கூட அது எதிரொலித்தது. ஆனால் இந்த மதத்தில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன. வேத மந்திரங்களை ஒரு சிலர் மட்டுமே ஓத முடியும். சடங்குகளுக்கு அதிக செலவு இழுக்கும். மட்டுமல்லாது அந்த காலத்தில் வேத மதத்தில் உயிர்பலி முறையும் இருந்தது. மட்டுமல்லாது சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகளும் இருந்தன. இதெல்லாம் சாமானிய மக்களிடமிருந்து வேத மதத்தை தூரமாக தள்ளி வைத்திருந்தது.

Bihar Unveiled Bihar Election 2025 Bihar

மகாவீரர்

இந்த இடைவெளியில்தான் சமணம் தோன்றியது. கி.மு. 8-6 நூற்றாண்டுகளில் சமண மதம் தொன்றியதாக ஆய்வார்கள் கூறியுள்ளனர். இந்த மதத்தின் கடைசி தீர்த்தங்கரர் 'மகாவீரர்' ஆவார். மொத்தம் 24 தீர்த்தங்கரர்கள் வாழ்ந்தார்கள் என்றும், இதில் கடைசி பெரியவர்தான் மகாவீரர் என்று மதம் கூறுகிறது. மகாவீரர் இன்றை பீகார் மாநிலத்தின் வைஷாலிக்கு அருகிலுள்ள குண்டகிராமம் என்ற இடத்தில் கிமு 599 இல் பிறந்ததாக சொல்லப்படுகிறது. இவர் பீகார் முழுவதும் சுற்றி சமண மதத்தின் போதனைகளை பரப்பினார்.

  • அகிம்சை
  • பற்றற்ற வாழ்வு
  • உயிர்களிடத்தில் கருணை

மன்னர்களின் ஆதரவு

ஆகியவைதான் சமண மதத்தின் அடிப்படை. அவர்கள் அசைவம் சாப்பிடமாட்டார்கள். உயிர்பலி கொடுக்கமாட்டார்கள். சண்டை, சச்சரவுகளுக்கு போகமாட்டார்கள். அதேபோல துறவறம் மேற்கொள்வார்கள். இவை அனைத்தும் வணிகர்கள் மத்தியில் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தியது. மகத பேரரசின் ஆட்சியாளர்களான பிம்பிசாரர், உதயின், காரவேலா மற்றும் அஜாதசத்ரு ஆகியோர் சமண மதத்தை பின்பற்றினர். இன்னும் சரியாக சொல்வதெனில், பிம்பிசாரர் மற்றும் அஜாதசத்ரு ஆகியோர் மகாவீரருடன் நேரடியாக தொடர்பு கொண்டிருந்தனர்.

மக்களின் ஆதரவு

ஒரு மதத்திற்கு ஜீவன் எனில் அது அரச ஆதரவுதான். சமண மதத்திற்கு அது கிடைத்தது. மட்டுமல்லாது வணிகர்களின் ஆதரவும், பொதுமக்களிடம் மதிப்பும் இருந்தது. ஆனால் இதில் சில பிரச்சனைகளும் இருந்தன. சமண மதம் என்பது ஒரு வாழ்வியல் முறை. கடுமையான துறவறத்தை இந்த மதம் போதித்தது. சாமானிய மக்களால் எப்படி துறவறம் மேற்கொள்ள முடியும்? அவர்களால் இறைச்சி உண்ணாமல் எப்படி இருக்க முடியும்? சண்டையிடாமல் வாழ்க்கையை எப்படி நடத்த முடியும்?

பிரிவுகளும் குழப்பமும்

இதெல்லாம் நடைமுறை சிக்கலாய் இருந்தன. எனவே பணக்காரர்கள் மத்தியிலும், அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மத்தியிலுமே சமண மதம் செல்வாக்காக மாற தொடங்கியது. இதில் மற்றொரு சிக்கல் என்னவெனில், 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் இறந்த பின்னர், இந்த மதம் சுவேதாம்பரர், திகம்பரர் என்றும் இரண்டாக உடைந்தது. இதில் முதல் தரப்பினர் வெள்ளை ஆடை உடுத்தி வாழ்ந்தனர். இரண்டாவது பிரிவினர் வானமே ஆடை என்று நிர்வாண வாழ்வை வாழ்ந்தனர். இது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாகத்தான் புத்த மதம் பிறந்தது. இது சமண மதத்திலிருந்து எப்படி வேறுபட்டிருந்தது? எந்தெந்த அரசர்களின் ஆதரவை பெற்றது? உலகம் முழுக்க எப்படி பரவியது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+