பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நன்றி தெரிவிக்கத்தான் நிதிஷை பார்க்க வந்தேன்.. விஆர்எஸ் வாங்கிய டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே பல்டி

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் முன்னாள் டிஜிபி குப்தேஸ்வர் பாண்டே இன்று, நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைவார் என்று நினைத்த நிலையில் திடீர் திருப்பமாக நிதிஷ் குமாரை சந்தித்து நன்றி தெரிவித்துவிட்டு சென்றுள்ளார்.

பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் நவம்பர் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது.

Former Bihar DGP Gupteshwar Pandey to join Nitish Kumar’s JDU today

நேற்று தேர்தல் பற்றிய அறிவிப்பை தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில்தான், சில நாட்கள் முன்பு, பீகார் போலீஸ் டிஜிபியாக இருந்த குப்தேஸ்வர் பாண்டே தனது பதவியிலிருந்து விஆர்எஸ் வாங்கிக் கொண்டார்.

அவர் ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுதான் விஆர்எஸ் வாங்கிவிட்டார் என்று கூறப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில், இன்று மதியம் 1 மணிக்கு குப்தேஸ்வர் பாண்டே, ஐக்கிய ஜனதாதளம் கட்சியில் அதிகாரப்பூர்வமாக சேர்கிறார் எனக் கூறப்பட்டது.

அதேபோல பாண்டே இன்று நிதிஷ்குமார் ஆபீஸ் வருகை தந்தார். நிதிஷ் குமாரை சந்திக்கும் முன்பாக நிருபர்களிடம் பேசிய குப்தேஸ்வர் பாண்டே, டிஜிபியாக இருந்தபோது முழு சுதந்திரத்துடன் செயல்பட அனுமதித்ததற்காக முதல்வர் நிதிஷ் குமாரை சந்தித்து நன்றி தெரிவிக்க வந்தேன். தேர்தலில் போட்டியிடுவது குறித்து நான் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றார்.

இந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்!! இந்தியா, இலங்கை உறவு... ஆயிரம் ஆண்டுகள் பழமையானது... ராஜபக்சவிடம் மோடி புகழாரம்!!

ஐபிஎஸ் அதிகாரி, அதிலும் சீனியர் அதிகாரி, மாநிலத்தில் மிக உயர்ந்த போலீஸ் பதவியில் இருந்தவர், தனது பதவியை துறந்துவிட்டு அரசியல் பக்கம் ஒதுங்கியுள்ளது பரபரப்பாக பேசப்படுகிறது. ஆனால் இவருக்கு சீட் கொடுக்க ஐக்கிய ஜனதாதளம் தயாராக இல்லையா, எனவேதான் இப்படி ஒரு பேட்டி கொடுத்தாரா என்ற கேள்விகள் எழுகின்றன.

English summary
Former Bihar DGP Gupteshwar Pandey will be joining Nitish Kumar-led Janata Dal (United) at a ceremony at 1 pm on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X