‛‛நல்லாட்சி வென்று புது பலம் கிடைத்துள்ளது’’.. பீகார் வெற்றியால் உற்சாகமான மோடி! நெகிழ்ச்சி நன்றி
பாட்னா: பீகாரில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில்,‛‛பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்துக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியது. எங்களின் சாதனையை பாராட்டி மாநிலத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான எங்களின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் மக்கள் வாக்களித்தனர். இந்த இணையற்ற வெற்றிக்கு அனைவருக்கும் நன்றி'' என கூறியுள்ளார்.
பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் பாஜக கூட்டணி வென்றுள்ளது.இதனால் பீகாரில் மீண்டும் பாஜகவின் கூட்டணி ஆட்சி என்பது உறுதியாகி உள்ளது.

இதனால் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் ஹேப்பியாகி உள்ளனர். இந்நிலையில் தான் பீகார் சட்டசபை தேர்தல் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவுகளை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட 4 பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது:
பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மாநிலத்துக்கு முழுமையான வளர்ச்சியை வழங்கியது. எங்களின் சாதனையை பாராட்டி மாநிலத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்வதற்கான எங்களின் தொலைநோக்கு பார்வை அடிப்படையில் மக்கள் வாக்களித்தனர். இந்த இணையற்ற வெற்றிக்கு முதல்வர் நிதிஷ் குமார், தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த சிராக் பஸ்வான், ஜித்ன ராம் மஞ்சி, உபேந்திர குஷ்வாஹா ஆகியோருக்கு வாழ்த்துகள்.
நல்லாட்சி வெற்றி பெற்றுள்ளது. வளர்ச்சி திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளது. மக்களுடன் தொடர்பில் இருந்த முறை வெற்றி பெற்றுள்ளது. சமூக நீதி வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் என்டிஏ ஆட்சிக்கு ஆசீர்வாதம் வழங்கி வரலாற்று வெற்றியை அளித்த ஒவ்வொருவருக்கும் நன்றி. இந்த வெற்றி மக்களுக்கும், பீகாருக்கும் சேவையாற்ற புதிய பலத்தை தந்துள்ளது.
அதேபோல் கடந்த சில மாதங்களாக கடினமாக உழைத்த அனைத்து என்டிஏ தொண்டர்களையும் பாராட்டுகிறேன். அவர்கள் மக்கள் மத்தியில் வளர்ச்சிக்கான திட்டங்களை விளக்கியதோடு, எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்துக்கு பதிலடி கொடுத்தனர். உண்மையிலேயே அவர்கள் பாராட்டத்தக்கவர்கள். வரும் காலத்தில் பீகாரின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, கலாசாரத்துக்காக இன்னும் திட்டங்களை செயல்படுத்துவோம். மாநிலத்தில் உள்ள இளைஞர்கள் மற்றும் மகளிருக்கு அதிக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுப்போம்'' என்று கூறியுள்ளார்.
பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் ஒரு கட்சி 123 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணி 202 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துள்ளது.மாறாக எதிர்க்கட்சிகளின் ‛மகாகத்பந்தன்' கூட்டணி படு தோல்வியடைந்துள்ளது. இந்த கூட்டணி மொத்தம் 35 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பாஜக கூட்டணியில் பாஜக 89 தொகுதி, நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி 85 தொகுதி, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் எல்ஜேபிஆர்வி கட்சி எனும் லோக்ஜன்சக்தி கட்சி (ராம்விலாஸ்) கட்சி 19 தொகுதி, மத்திய அமைச்சர் ஜிதன்ராம் மஞ்சியின் எச்ஏஎம்எஸ் எனும் ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்குலர்) கட்சி 5 தொகுதி, உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா (ஆர்எஸ்எச்டிஎல்கேஎம்) கட்சி 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மாறாக ‛மகாகத்பந்தன்' கூட்டணியில் தேஜஸ்வி யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி 25 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியில் உள்ள சிபிஐ(எம்எல்) (எல்) கட்சி 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஐஐபி எனும் இந்தியன் இன்க்ளூசிவ் கட்சி தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்த 2 கூட்டணியை தவிர்த்து தனியாக போட்டியிட்ட அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 5 தொகுதிகளிலும், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications