Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛35 ஆண்டாய் MLA ஆகவில்லை’.. ஆனாலும் 9வது முறையாக பீகார் முதல்வரான நிதிஷ் குமார்! எப்படி? சுவாரசியம்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் மாநில முதல்வராக 9வது முறையாக நிதிஷ் குமார் இன்று பொறுப்பேற்றுள்ளார். தற்போது பாஜகவுடன் கூட்டணி அமைத்து முதல்வர் பதவியை எட்டி பிடித்துள்ள நிலையில் நிதிஷ் குமார் சட்டசபை தேர்தலில் கடந்த 35 ஆண்டுகளாக போட்டியிடாமலே 9வது முறையாக முதல்வர் அரியணையில் அமர்ந்துள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது. அது எப்படி? வாங்க பார்க்கலாம்.

பீகாரில் கடந்த 2020ம் ஆண்டு சட்டசபை தேர்தலை பாஜகவுடன் இணைந்து நிதிஷ் குமாரின் ஜேடியூ எனும் ஐக்கிய ஜனதாதளம் கட்சி எதிர்கொண்டது. இந்த தேர்தலில் பாஜக-ஜேடியூ கூட்டணி வெற்றி பெற்றது. 243 சட்டசபை தொகுதிகளில் 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடிக்கலாம் என்ற நிலையில்
பாஜக 74 தொகுதிகளில், ஜேடியூ 43 தொகுதிகளிலும் வென்றது.

How Nitish kumar takes oath as bihar CM for 9th time with out constest assembly election for 35 years

இதையடுத்து நிதிஷ் குமார் முதல்வரானார். இந்த தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி கட்சி 72 தொகுதிகளிலும் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும் வென்று இருந்தது. லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் எதிர்க்கட்சி தலைரவாக செயல்பட்டார். இதையடுத்து 2 ஆண்டுகளில் பாஜகவை விட்டு நிதிஷ் குமார் 2022ல் வெளியேறினார்.

அதன்பிறகு பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்தது. ஜேடியூ, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தன. இந்த கூட்டணியிலும் நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வாக இருந்தார். தற்போது இந்த கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது. ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். மேலும் இன்று காலை அவர் ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் வழங்கினார்.

இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள நிதிஷ் குமார், பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார். இதையடுத்து இன்று மாலையில் நிதிஷ் குமார் 9வது முறையாக பீகார் முதல்வராக பொறுப்பு வகித்துள்ளார். குறிப்பாக கடந்த 2005ம் ஆண்டு முதல் இன்று வரை பீகார் முதல்வராக நிதிஷ் குமார் தொடர்ந்து வருகிறார். இந்த காலக்கட்டத்தில் 2014 மே மாதம் முதல் 2015 பிப்ரவரி மாதம் மட்டும் ஜிதன் ராம் மஞ்சி முதல்வராக இருந்தார். மீதமுள்ள காலம் முழுவதும் நிதிஷ் குமார் தான் முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார்.

இப்படி மொத்தம் 19 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் நிதிஷ் குமாருக்கு சட்டசபை தேர்தல் என்றால் அலர்ஜி என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 9 வது முறையாக அவர் முதல்வராக பதவியேற்று இருந்தாலும் கூட ஒருமுறை மட்டுமே அவர் எம்எல்ஏவாக ஆகி உள்ளார். அதுவும் கடந்த 1985ம் ஆண்டில் தான். அதன்பிறகு கடந்த 35 ஆண்டுகளாக நிதிஷ் குமார் எம்எல்ஏ ஆகாமலே முதல்வர் பதவியை வகித்து வருகிறார். இதற்கு காரணம் அங்குள்ள சட்ட மேலவை தான்.

அதாவது தமிழ்நாட்டை எடுத்து கொண்டால் சட்டசபை மட்டும் தான் உள்ளது. ஆனால் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பீகார் உள்பட மேலும் சில மாநிலங்களில் சட்டசபை மட்டுமின்றி சட்ட மேலவையும் உள்ளது. இந்த சட்ட மேலவையின் உறுப்பினர்களை எம்எல்சி என அழைப்பார்கள்.

இந்த சட்ட மேலவை என்பது நாடாளுமன்றத்தில் ராஜ்யசபா போன்றது. அதாவது நாடாளுமன்றத்தில் மக்களவை (லோக்சபா) எம்பிக்கள் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார்கள். இவர்கள் மக்களால் நேரடியாக தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆனால் நாடாளுமன்ற மாநிலங்களை (ராஜ்யசபா) எம்பிக்கள் என்பவர்கள் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள எம்எல்ஏக்கள் ஓட்டளித்து தேர்வு செய்யப்படுவார்கள். இப்படி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தாலும் கூட அவர்களால் மத்திய அமைச்சரவையில் இடம்பெற முடியும். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்பட பலர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்கள் தான்.

அதேபோல் தான் பீகாரில் சட்டசபை தேர்தலில் போட்டியிடாமல் நிதிஷ் குமார் சட்ட மேலவை உறுப்பினராக இருந்து கொண்டு முதல்வர் பதவியை வகித்து வருகிறார். சட்ட மேலவை உறுப்பினர்கர் அந்த மாநிலங்களில் உள்ள எம்எல்ஏக்கள் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த சட்ட மேலவை உறுப்பினராக இருந்து கொண்டு தான் நிதிஷ் குமார் 9வது முறையாக முதல்வராகி உள்ளார். இன்னும் சொல்லப்போனால் நிதிஷ் குமாரை பொறுத்தமட்டில் சட்டசபை தேர்தல் என்றால் அலர்ஜியாக உள்ளது.

முதல் முதலில் அவர் 1977 ம் ஆண்டில் ஹரனாட் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன்பிறகு 1985ல் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனாார். அதன்பிறகு 1995ல் எம்பியாக இருந்து கொண்டு மீண்டும் சட்டசபை தேர்தலில் ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனாலும் அவர் எம்எல்ஏ பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டு எம்பியாக தொடர்ந்தார். அதன்பிறகு அவர் சட்டசபை தேர்தலில் ஆர்வம் காட்டவில்லை. நாடாளுமன்ற தேர்தலில் தான் கவனம் செலுத்தி வந்தார். இதனால் அவர் 6 முறை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். மேலும் மத்திய ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார்.

இருப்பினும் கூட அவர் நாடாளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டு நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டது. கடைசியாக அவர் 2004ல் பீகாரில் நாளந்தா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு எம்பியானார். ஆனால் அடுத்த ஆண்டு 2005ல் அவரது கட்சி பீகாரில் அமோக வெற்றி பெற்றதால் எம்பி பதவியை ராஜினாமா செய்துவிட்டு பீகார் முதல்வரானார். அதன்பிறகு தொடர்ந்து பீகார் அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த வருகிறார். தேசிய அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இதன்மூலம் 2005 முதல் இப்போது வரை அவர் எம்எல்சியாகவே தொடர்ந்து முதல்வர் இருக்கையில் அமர்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+