அரசு அதிகாரிகள் கூட்டத்தில் லாலு பிரசாத் யாதவின் மருமகன்.. பீகாரில் புதிய சர்ச்சை.. பாஜக விமர்சனம்!
பாட்னா: பீகாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி நடந்து வரும் நிலையில், அவரது கூட்டணி கட்சியான ராஷ்டீரிய ஜனதா தள கட்சியை சேர்ந்த லாலு பிரசாத் யாதவின் மருமகன் அரசு அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டது புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
பீகாரில் பாஜனதாவுடனான கூட்டணியை உதறிவிட்டு, புதிய கூட்டணி அமைத்து மீண்டும் நிதிஷ் குமார் முதல்வரானார்.
ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து கொண்டதால் பாஜனதா எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது. மேலும் டென்சனில் நிதிஷ் குமாரை குறை கூறி வந்தது.

மீண்டும் சர்ச்சை
இதற்காக நிதிஷ் குமார் மற்றும் அவரது கூட்டணி குறித்து அடிக்கடி ஏதாவது கருத்து தெரிவித்து வருகிறது. இதேபோல் பதிலுக்கு நிதிஷ் குமார் மற்றும் அவரது கூட்டணி கட்சிகளும் பாஜனதாவை விமர்சித்து வருகின்றன. தொடர்ந்து பீகாரில் மாறி மாறி வார்த்தை யுத்தம் நடைபெற்றும் வரும் நிலையில், இதில் அவ்வப்போது யாராவது சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதும் வாடிக்கையாகி உள்ளது. அந்த வகையில், தற்போது பீகாரில் ஆளும் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் மருமகன் ஷைலேஷ் குமார், அரசு அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

லாலு பிரசாத் யாதவின் மருமகன்
பீகாரில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் உள்ளார். இவரது தலைமையில் நேற்று பீகாரின் தலைமைச்செயலகத்தில் சுற்றுச்சூழல் துறை தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிகாரிகள் உடன் லாலு பிரசாத் யாதவின் மருமகன் சைலேஷ் குமார் கலந்து கொண்டதுதான் தற்போது கடும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

நிதிஷ் குமார் தெளிவுபடுத்த வேண்டும்
இந்த விவகாரத்தை கையில் எடுத்து நிதிஷ்குமார் அரசை கடுமையாக விமர்சித்துள்ள பாஜக, "லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ் சாலை கட்டுமானத்துறை தொடர்பான ஆலோசனையில் கட்சி உறுப்பினர் சஞ்செய் யாதவுடன் பங்கேற்றார். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவோ, தனது மைத்துனருடன் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்கிறார். அதிகாரிகள் மட்டத்திலான ஆலோசனைக்கூட்டத்தில் மைத்துனருக்கும் கட்சி உறுப்பினருக்கும் இடம் இருக்கிறதா என நிதிஷ் குமார் தெளிவுபடுத்த வேண்டும்" என சீண்டியுள்ளது.

குடும்ப நலனை சார்ந்தே இருக்கும்
பாஜக செய்தி தொடர்பாளர் நிகில் ஆனந்த் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "ராஷ்ட்ரிய ஜனதா தளம் அடிப்படையாகவே ஒரு குடும்ப கட்சியாகும். எனவே, அந்த கட்சியில் எது நடந்தாலும் யாருக்கும் வியப்பு இருக்கப் போவது இல்லை. திருப்திப்படுத்தும் அரசியல் செய்யும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி செய்யும் அனைத்து டிராமாக்களும் அவர்களின் குடும்ப நலனை சார்ந்தே இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications