பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போன மனைவி.. 2வது கல்யாணம் செய்து கொண்ட கணவர்.. அட கொடுமையே!
ஊரடங்கில் மனைவி தாய் வீட்டில் இருந்ததால் கணவன் 2வது திருமணம் செய்து கொண்டார்
பாட்னா: பிரசவத்துக்கு அம்மா வீட்டுக்கு போன மனைவி, ஊரடங்கினால் திரும்பி வரவே முடியவில்லை.. அதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கணவர் மனைவி வராததால், 2-வது கல்யாணம் செய்து கொண்டார்.. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் வைரஸ் தொற்று பீதி கிளப்பி விட்டு வருகிறது.. நம் நாட்டிலும் இதே நிலைதான்.. அதனால்தான் லாக்டவுன் போடப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் பெருமளவு மக்களுக்கு நன்மைதான் என்றாலும், ஒரு சில இடர்களும் இருக்கவே செய்கின்றன... பொருளாதார ரீதியான பாதிப்புகளும் நிறையவே ஏற்பட்டு வருகின்றன.

இப்படி வாழ்வா, சாவா என்று இரண்டிற்கும் நடுவில் நாடு உள்ள நிலையில், ஒருத்தருக்கு மனைவி தன்னுடன் இல்லை என்ற ஏக்கம் வந்துள்ளது.. சில தினங்களுக்கு முன்புகூட, அம்மா வீட்டுக்கு போன மனைவி திரும்பி வராததால், மனம் நொந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனால் பீகாரில் ஒரு நபர், இன்னொரு பெண்ணை கல்யாணமே செய்து கொண்டார்.
பாலிகஞ்ச் மாவட்டம் பரத்புராவை சேர்ந்தவர் பெயர் தீரஜ் குமார்.. இவரது மனைவி பிரசவத்துக்கு அம்மா வீட்டிற்கு சில வாரங்களுக்கு முன்பு சென்றிருந்தார்.. அம்மாநிலத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அந்த பெண்ணால் திரும்பி கணவன் வீட்டிற்கு வர முடியவில்லை.. அப்படி வருவதற்கும் போக்குவரத்து எதுவும் இல்லை.
இதனால் ஆத்திரமடைந்த தீரஜ், தன் மனைவிக்கு தினமும் போன் செய்து கிளம்பி வருமாறு சொல்லி கொண்டே இருந்தார்.. ஊரடங்கு இருக்கும்போது எப்படி வர முடியும் என்று மனைவி கேட்டார். அதனால் இன்னும் கோபமாகிவிட்ட தீரஜ், இன்னொரு கல்யாணம் செய்து கொண்டார்.. ரகுநாத்பூரை சேர்ந்த பெண் அவர்.. தீரஜின் முன்னாள் காதலியும்கூட.
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதும், முதல் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.. இதுகுறித்து துல்ஹான் பஜார் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தந்தார்.. கணவர் 2-வது திருமணம் செய்து கொண்டு மிரட்டல் விடுக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் போலீசார் கணவர் தீரஜ் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications