மாறி மாறி கூட்டணி வைத்தாலும் மவுசு குறையாத நிதிஷ்.. பீகாரில் பரிதாப நிலையில் காங்கிரஸ்! எக்ஸிட் போல்
பாட்னா: இன்றுடன் லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதில் பீகாரில் நிதிஷ் குமாரின் தேசிய ஜனநாயக கூட்டணி 33 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று இந்தியா டுடே கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது.
பீகாரில் மொத்தம் 40 தொகுதிகள் உள்ளன. பீகாரில் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் பலப்பரிட்சை நடத்துகின்றன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக 17 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. லோக் ஜனசக்தி கட்சி (ராம்விலாஸ் பாஸ்வான்) 5 தொகுதிகளிலும், இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சி ஒரு தொகுதியிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகின்றன.
பாஜக கூட்டணியை முறித்துக்கொண்டு மகாபந்தன் கூட்டணியில் இணைந்த நிதிஷ் குமார், இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தார். ஆனால், திடீரென இந்தியா கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக கூட்டணியில் ஐக்கியமானார். இதனால், பல்டி குமார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
சிவகங்கையில் கார்த்தி சிதம்பரம் வெல்வாரா? 2வது இடத்திற்கு வரும் கட்சி எது? வெளியான கருத்துக்கணிப்பு
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை பல்வேறு செய்தி நிறுவனங்களும் வெளியிட்டு வருகின்றன. அதன்படி இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 29 - 33 இடங்களிலும், இந்தியா கூட்டணி 7-10 இடங்களிலும் பிற கட்சிகள் 0-2 என்ற இடங்களிலும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிதிஷ் குமார் மாறி மாறி கூட்டணி அமைத்தாலும் அவரது மவுசு குறையாமல் இருப்பதையே இந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது.
பீகார் மொத்த லோக்சபா தொகுதிகள்: 40
* தேசிய ஜனநாயக கூட்டணி: 29 - 33 இடங்கள்.
* இந்தியா கூட்டணி: 7 - 10 இடங்கள்.
* பிற கட்சிகள்: 0 - 2 இடங்கள்.
-
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications