உச்சக்கட்ட பதற்றம்! பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது மர்ம நபர் தாக்குதல்! பரபர வீடியோ
பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை அடையாளம் தெரியாத மர்ம நபர் தாக்கும் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
பீகார் மாநிலத்தில் இப்போது ஐக்கிய ஜனதா தளம்- பாஜகவின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் உள்ளார்.
சொந்த ஊரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் நிதிஷ் குமாரை அடையாளம் தெரியாத மர்ம நபர் தாக்கியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலம்
பீகார் மாநிலம் பக்தியார்பூரில் நடைபெறும் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் முதல்வர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். பக்தியார்பூர் நிதிஷ் குமாரின் சொந்த ஊர் என்பதால் அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெரும் திரளாகத் திரண்டு வந்த மக்கள் நிதிஷ் குமாரின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். முதல்வரின் வருகையை முன்னிட்டு பக்தியார்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

தியாகி சிலை
இந்த பயணத்தின் போது, முதல்வர் நிதிஷ் குமார் பக்தியார்பூர் நகரில் உள்ள அரசு மருத்துவமனை அருகே அமைந்துள்ள சுதந்திரப் போராட்ட தியாகி ஒருவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதாகச் செலுத்தினார். இதற்காக முதல்வர் நிதிஷ்குமார், தியாகியின் சிலை உள்ள படிக்கட்டில் ஏறி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தத் தயாரானார்.
|
வீடியோ
அப்போது திடீரென பின்னால் இருந்து வந்த இளைஞர் ஒருவர், முதல்வர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் முதல்வருக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அதில் டி சார்ட் அணிந்து வரும் இளைஞர் ஒருவர் முதல்வரை பின்னால் இருந்து தாக்குகிறார். இதையடுத்து உடனடியாக அருகிலிருந்து வரும் பாதுகாவலர்கள் அவரை பிடித்துச் செல்கின்றனர்.

தாக்குதல்
இந்தச் சம்பவத்தில் அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. முதல்வரைத் தாக்கிய நபர் பக்தியார்பூரில் உள்ள முகமதுபூர் பகுதியைச் சேர்ந்த 25 வயதான சங்கர் என்ற சோட்டு என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அப்பகுதியில் சிறிய அளவில் நகைக்கடை நடத்தி வருகிறார். அந்த நபர் எதற்காக முதலமைச்சரைத் தாக்கினார் என்பது குறித்து இதுவரை தெளிவாகத் தெரியவில்லை. அந்த நபரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications