மோடி பணம் போட்டாருன்னு நினைச்சேன்.. வங்கி கணக்கில் தவறி வந்த ரூ.5 லட்சம்.. விவசாயி சொன்ன செம காரணம்
பாட்னா: பீகாரில் வங்கி கணக்கில் தவறி வந்த 5 லட்சம் ரூபாய் பணத்தை விவசாயி ஒருவர் திருப்பி கொடுக்காமல் வங்கி நிர்வாகிகளிடம் சண்டை போட்டது பெரிய வைரலாகி உள்ளது. இதற்கு அவர் சொன்ன காரணம்தான் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் காகாரியா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவர் அங்கு விவசாய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பக்திபூர் கிராமம் அருகே பழைய வீடு ஒன்றில் வசித்து வரும் இவர் ஏழ்மையான பின்னணியை சேர்ந்தவர். இவருக்கு 65 வயது ஆகிறது. தனது மனைவி மற்றும் ஒரு மகனுடன் இவர் வசித்து வருகிறார்.

வங்கி பணம்
ரஞ்சித் தாஸ் வங்கி கணக்கிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் அங்கு இருந்த கிராம வங்கியில் இருந்து 5 லட்சம் ரூபாய் பணம் வந்துள்ளது. வேறு ஒருவர் வாங்கிய 5 லட்சம் ரூபாய் லோனிற்கு அவரின் கணக்கிற்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக இவரின் கணக்கிற்கு தவறுதலாக பணம் வந்துள்ளது. இவரும் அந்த பணம் குறித்து வங்கி அதிகாரிகளிடம் புகார் அளிக்கவில்லை.

புகார்
இதையடுத்து வங்கியில் லோனுக்கு விண்ணப்பித்து இருந்தவர் தனக்கு லோன் கிடைத்துவிட்டதாக மெசேஜ் வந்துவிட்டது ஆனால் லோன் வரவில்லை என்று புகார் அளித்துள்ளார். இதன் காரணமாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அதில் இந்த 5 லட்சம் ரூபாய் பணம் ரஞ்சித் தாஸுக்கு சென்றது உறுதி செய்யப்பட்டது.

ரஞ்சித் தாஸ்
இதில் ரஞ்சித் தாஸிடம் போலீசார் விசாரணை செய்ததில், அந்த பணத்தை நான் அப்போதே விவசாய பணிகளுக்காகவும், வீட்டில் இருந்த மற்ற செலவுகளுக்காகவும் செலவு செய்திட்டேன். எனக்கு கடந்த மார்ச்சில் பணம் கிடைத்தது. நான் அது பிரதமர் மோடி கொடுத்த பணம் என்று நினைத்தேன். மோடி எல்லோருக்கும் 15 லட்சம் ரூபாய் தருவதாக கூறினார்.

மோடி பணம்
அவர்தான் எனக்கு பணம் போட்டு இருக்கிறார் என்று நினைத்தேன். நான் அந்த பணம் அனைத்தையும் செலவு செய்துவிட்டேன். என்னுடைய வங்கி கணக்கில் இப்போது பணமே இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். போலீசார் பல முறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டு இருக்கிறார்கள். ஒவ்வொருமுறை விளக்கம் கேட்ட போதும் அவர் இதே விளக்கத்தை குறிப்பிட்டுள்ளார்.

கைது
ஆனால் போலீசார் இவரின் விளக்கத்தை ஏற்கவில்லை. மொத்தமாக பணத்தை செலவு செய்துவிட்டேன் என்று கூறியதை போலீசார் ஏற்கவில்லை. இவரிடம் பணம் கேட்டு வாங்கும் முடிவில் போலீசார் இருக்கிறார்கள். வங்கி மேனேஜர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இவர் மீது வழக்கு பதியப்பட்டு தற்போது கைதும் செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications